எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்று விடியும் ?????? சில நிமிட ஆசைக்கு பெண்களை...

என்று  விடியும் ??????

சில நிமிட ஆசைக்கு  பெண்களை பலி கொடுக்கும் கொடூர காமுகன்களுக்கு தண்டனை தர கடவுளும் ஊமையா இருபது  ஏனோ 



அவளுக்கொரு கனவு இருந்தது. நல்ல தரமான வாசற்கதவுகள் உடைய ஒரு வீட்டை கட்ட வேண்டும். அதில் தன் அம்மாவை மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று. அவளுக்கொரு விருப்பம் இருந்தது, இந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் களையப் பட வேண்டும். எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று. அவளுக்கொரு இலட்சியம் இருந்தது, விரைவில் இந்த வறுமையிலிருந்து விடுப்பட வேண்டும் என்று. ஆனால், அந்த வியாழக்கிழமை எல்லாம் சிதைந்தது. இல்லை இல்லை  மிக மோசமாக சிதைக்கப்பட்டது. வாழ்க்கை என்றுமே அவளுக்கு மகிழ்வானதாக இருந்ததில்லை, இப்போது அவளுக்கு மரணமும் துயர்மிகுந்த ஒன்றாகவே அமைந்துவிட்டது.

அவள் வாழ்வை நேசித்தாள்: அவள் வறுமையிலும் இந்த வாழ்வை மிக நேசித்தாள். அவள் வறுமையை வெளிக்காட்டி யாரிடமும் பாரிதாபத்தை கோரியதில்லை. அவளது வயதான வகுப்பு தோழி ரீட்டா, “விடுதிக்கும், கல்லூரிக்கும் சில மைல்கள் தூரம். ஆனால், அவள் என்றுமே பேருந்தில் பயணித்தது இல்லை. காரணம் பேருந்து கட்டணம். தினமும் பல மைல் தூரம் நடந்தே கல்லூரிக்கு வருவாள். அவள் சாப்பிட்டும் நாங்கள் பெரும்பாலும் பார்த்ததில்லை. சாப்பிட்டால் தானே பார்ப்பதற்கு. நாங்கள் உணவு கொடுத்தாலும், அதை வாங்க அவள் தன்மானம் இடமளிக்கவில்லை.” 

அவள் பெரும்பாலும் தனிமையில் தான் இருந்திருக்கிறாள். ஒன்று ஏதாவது யோசனையில் இருப்பாள் அல்லது புத்தகத்தில் புதைந்து இருப்பாள். அவளின் ஒரே தோழி ரீட்டா மட்டுமே. 

ரீட்டா சொல்கிறார், “கல்லூரி முடிந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் அவள் என்றுமே பங்கெடுத்ததில்லை. வீட்டில் தனியாக அம்மா இருப்பார் என்ற காரணத்தினால், அவள் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடுவாள்.”

அவளின் இன்னொரு கனவாக இருந்தது வீட்டிற்கான நிலை கதவு. பல ஆண்டுகள் அவள் கதவில்லாத வீட்டில் தான் வசித்து இருக்கிறாள். ரீட்டா ஒரு முறை கதவிற்கு பணம் தருவதாக சொன்ன போதும் அவள் வாங்க மறுத்திருக்கிறாள்.

ஆனால், இவ்வளவு அழுத்தங்கள் தாண்டியும் அவள் வாழ்வை மிக நேசித்தாள். வாழ்வில் முன்னேற வேண்டும். இந்த வறுமையை வென்றெடுக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அவளது அம்மா ராஜேஸ்வரி சொல்கிறார், “தன் போல் வறுமையில் இருக்கும் பெண்களுக்காக போராட வேண்டும் என்று விரும்பினாள். அதனால் தான் அவள் சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். ஆனால், பொருளாதார நெருக்கடியால் அவளால் கல்லூரிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை” 

“எங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் தான் கோயில் இருக்கிறது. சாமி நடந்து வந்திருந்தால் கூட எங்களை காத்து இருக்கலாம்... ஏனோ எங்களை காக்க மட்டும் சாமி எப்போதும் வர மாட்டேன் என்கிறது...” என்று வெடித்து அழுகிறாள் ராஜேஸ்வரி.

அவளும், அவளது அம்மா ராஜேஸ்வரியும்தான் அந்த சிறிய வீட்டில் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களது தனிமையை பயன்படுத்தி, பல முறை அவளை பயன்படுத்தி கொள்ள சில ஆண்கள் முயற்சித்து இருக்கிறார்கள். அவளது பாதுக்காப்பிற்காகவே ராஜேஸ்வரி அவளுக்கு பென் காமிரா வாங்கி கொடுத்து இருக்கிறாள்.

அவள் நிர்பயா இல்லை:நிர்பயா சம்பவத்தில் அனைத்து அறங்களையும் காத்த தேசிய ஊடகங்கள்.  இந்த கேரள பெண் விஷயததில் எதையும் கண்டுகொள்ளவில்லை. நிர்பயா சம்பவத்தில் இந்தியாவே கொதித்து எழுந்தது. ஏன் தமிழ்நாட்டில் கூட அனைத்து மாவட்டங்களிலும் மெளன ஊர்வலங்கள் நடந்தது. இந்தியாவே நியாயம் கேட்டது. ஆனால், இவள் மரணத்திற்காக அப்படி யாரும் நீதி கோரவில்லை. கேரள எல்லைகளை தாண்டி எந்த போராட்டமும் நடந்துவிடவில்லை.எது நம்மை தடுக்கிறது. நிச்சயம் நிர்பயாவிற்காக நடந்த உன்னத போராட்டங்களை நான் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், அது போல் ஏன் யாரும் இவளுக்காக போராட வரவில்லை...?   

பதிவு : lathaponnarivu
நாள் : 9-May-16, 7:28 pm

மேலே