எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருக்குறளும் திருமந்திரமும் ஆய்வுக் கட்டுரைத் தொடர் ....ஆதரவு வேண்டுகிறேன்...

  திருக்குறளும் திருமந்திரமும் ஆய்வுக் கட்டுரைத் தொடர்  ....ஆதரவு   வேண்டுகிறேன் !


திருவள்ளுவரைப் போலவே திருமூலரும் சமஸ்கிருதம் பயின்றவர். திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருவந்தாதி 26 ஆம் பாடலில் திருமூலர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களும் நிரம்பப் பெற்ற தமிழ்மறைகளை, வடமொழி வேதங்களாய்த் தழுவி, “தமிழாகமம்” எனப் போற்றப்படும் திருமந்திரப் பனுவலை இயற்றினர் என்று கூறுவதால், இவரது வடமொழிப் புலமையும் வேதங்களைப் புரிந்து கொண்ட பாண்மையும் விளங்கும். 
இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந்து இருந்ததோடு, இறைவனியல்பை உலக மாந்தர் உணர்ந்து உய்தி பெறும் வண்ணம் தமிழிலும் வடமொழியிலும் இறை நூலாகிய அருள் நூல்களை அமைத்திருந்தனர்..  

பதிவு : T. Joseph Julius
நாள் : 25-May-16, 3:24 pm

மேலே