எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 18"மார் கழி...

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 18"மார்கழி மழை இடைவிடாது மண்ணை தொட்டு ஓய்ந்தது..மரங்கள்,செடிகள்,கொடிகள்,எல்லாம் தூசுக்களை அகற்றி தூய்மையாக தங்களை ஆக்கிச் சென்ற மேகங்களுக்கு நன்றியை சொல்லிக் கொண்டிருக்கின்றன.குளிர்மை நிறைந்த வானிலை ஊரெங்கும் பாதை போடுகிறது..அதில் ஓர் அழியாத காதல் சரித்திரம் பயணம் அமைக்கிறது..நாளும் பல ரயில்கள் ஒடி ஓய்ந்த தண்டபாலத்தின் மீது ஓயாமல் இரு காதலர்கள் தோள் சாய்ந்து மெளனமாக நடந்து உலகையும் காதலால் ரசிக்கின்றார்கள்..மாலையும் மங்கிப் போன பொழுதில் ஒரு வண்ணக் 

குடைக்குள் இரு காதல் வானவில்கள் கண்களை கவர்ந்து உள்ளங்களை கோர்த்து வாழ்க்கை முழுவதும் இணை பிரியாது சேர்ந்திருக்க இறைவனிடம் பயணச் சீட்டை வாங்கச் செல்கிறது,,

சில நாட்கள் பழக்கம் என்றாலும் பல ஆண்டுகள் கடந்த காதலை போல் மனங்களின் கடிகாரத்தில் 
முட்கள் சுகமான சுமையோடு நொடிகளை கடத்துகிறது.ஓய்ந்த மழை மீண்டும் வாராத என்று மங்கையின் உள்ளம் ஏங்க,அவனின் உள்ளம் இவளின் ஆசைக்காய் இறைவனிடம் மனதால் பிராத்திக்கின்றான்.மெழுகின்  வெளிச்சம் போல அவளின் முகத்தில் அழகான இரு பருக்கள் .ஆசையோடு அவன் விரல்களும் தொட்டுப் பார்த்து மலரின் மென்மையாய் உணர்ந்ததை போல மனதின் எழுதிக் கொள்கிறான்..இந்த பாதை இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தால் வாழ்க்கையில் மரணம் கூட ஒரு நினைவாக எம் காதலில் விளையும் என்று இரு மனங்களிலும் அணை கட்டிக்  கொள்ள முடியாத ஆசைகளின் வெள்ளம் கனவின் நதியில் விழுகிறது..

இருவரும் நீண்ட தூரம் கடந்த பின் கல்லறைகள் இவர்கள் செல்லும் பாதையை வழி மறிக்கின்றது.
அதில் பல உண்மைக் காதலர்களின் ஆன்மாக்கள் உறங்காமல் அழுது கொண்டிருக்கிறது.இவனும் இவளும் நினைவுகள் மனதை தொட்டதால் நிலையின்றி மண்ணில் விழுகின்றனர்,யாருமில்லாத இந்த பாதையில் கல்லறையில் முதன் முதலாய் விழுந்த விதைகள் இந்தக் காதல் ஜோடி தான்..மதம்,இனம் கடந்த காதல் சிலரின் வஞ்சகம் தலை தூக்க விஷம் கொடுத்து கொல்லப்பட்ட 
சரித்திரம் வென்ற காதலர்கள் தான் இவர்கள்..அன்பான வாழ்க்கையை நாடிச் சென்ற உள்ளங்கள் அழிவை காலத்தால் பரிசாக பெற்று தங்களுக்குள் தங்களை புதைத்தும் எறித்தும் முலாமிட்ட உணர்வுகளில் உள்ளம் மட்டும் இன்னும் அழியாமல் ஆன்மாக்களை தட்டி எழுப்பி வாழ நினைத்த வாழ்க்கையை இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.தென்றலும்,நெருப்பும் இங்கு தடைகளில்லை

இவளை போல் இவன் ஆசைப்படும் பெண் குழந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போன அவளது கருவறைகள் இறந்த பின்னும் கருவை சுமக்கும் வரத்தை இறைவனால் பெற்ற போதிலும் 
உண்மை காதலன் கல்லறையில் கண்டு படித்த பிரசவம் எனும் மகிமையை என்னவள் உயிரும் உடம்பும் தாங்காது என்ற அக்கறையில் அன்பே நீதான் என்றும் என் முதல் பிள்ளை என்ற கல்லறை வாசகத்துடன் அவளை தினம் குழந்தையாக நினைத்து தாலாட்டி அந்த உயிரற்ற கல்லறையில் அவளை உறங்க வைக்கிறான்..அன்பால் ஜடை பின்னி திருஷ்டி பொட்டிட்டு ஒரு தாயின்உணர்வுகளை இவனும் பெற்று அவளை மரணம் கடந்த பின்னும் ஓயாமல் காதலிக்கிறான்..இவளும் அவனை தாயாக நெருக்கும் கல்லறைக்குள் இவன் சுமைகள் அவன் ஏற்று இவனை காக்கிறாள்..இத்தகைய காதல் மண்ணில் பேசப்படுவதில்லை.மண்ணுக்கடியில் தான் வாழ்கிறது.

காதல் ஒரு விசித்திரமான உணர்வுகளில் ஒன்று..அதனை உணராதவர்கள் மண்ணில் எங்குமில்லை 
மனதில் காற்றாய் நுழைந்து உயிரை குடையும் இக் காதல் சரித்திரத்தின் கல்லறையில் புதுப் பூக்கள் நாளும் பூத்தாலும் மனதினால் தீட்டப்படும் இரங்கலை கவியாக காத்திருக்கிறது இந்தக் காதல் கதையும்,மனதின் உணர்வுகளை கவியாக இங்கே பதிவிடுங்கள்...

நாள் : 24-Oct-16, 10:04 am

மேலே