எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரூ.2000 நோட்டு எளிதில் கிழிவதாக கேரள பெண் புகார்...

ரூ.2000 நோட்டு எளிதில் கிழிவதாக கேரள பெண் புகார்

ரூ.2000 நோட்டு

கோப்புப் படம்: கிழந்த நிலையிலுள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டு500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.2000, 500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கேரளாவில் வங்கியில் இருந்து எடுத்துவந்த புதிய ரூ.2000 நோட்டு கிழிந்ததாக பெண் ஒருவர் புகார் கூறியிருக்கிறார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பா பகுதியைச் சேந்த பி.சி.ஷரிபா என்பவர்தான் இந்தக் புகாரை முன்வைத்துள்ளார்.

ஷரிபா புதன்கிழமை தளிபரம்பா நகரின் ஃபெடரல் வங்கியிலிருந்து பணம் எடுத்துள்ளார். ரூ.2000 நோட்டுகள் 5 பெற்றிருக்கிறார். அவற்றில் 456828 வரிசை எண் கொண்ட 2000 ரூபாய் நோட்டின் மேற்பரப்பு கிழிய ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அந்த நோட்டு எடுக்கப்பட்ட வங்கியிலேயே திருப்பி செலுத்தச் சென்றிருக்கிறார். ஆனால், வங்கியோ அந்த கிழிந்த நோட்டைப் பெறத் தயாராக இல்லை. ஷரிபாவின் புகார் குறித்து விளக்கமளிக்க வங்கி அதிகாரிகளும் தயாராக இல்லை.

புதிய ரூ.2000 நோட்டு கிழிந்தது குறித்து ஷரிபாவின் மகன் ஹிமிலை தொடடர்பு கொண்டு கேட்டபோது அவர், "புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தும்போது கிழிவதை கண்டேன். இந்த நோட்டு மட்டுமல்லாது இதனுடன் வழங்கப்பட்ட பிற நோட்டுகளும் இதே போன்ற அறிகுறிகளுடன் உள்ளன.

சம்பந்தப்பட்ட வங்கியிடம் இதனைப் பற்றி கூறிய போது அவர்கள் அந்த ரூபாய் நோட்டை திரும்ப பெற மறுத்துவிட்டனர். இது குறித்து எந்த உடனடி பதிலையும் வங்கி நிர்வாகம் அளிக்கவில்லை. என் அம்மா நீண்ட நேரம் வரிசையில் நின்று இந்த ரூபாய் நோட்களை பெற்றார்" என்றார்.










நாள் : 21-Dec-16, 11:48 pm

மேலே