எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளில்லாத பொழுதுகள் விழிப்பு கடிகையின் அலறல் சத்தத்தில் விடிந்தது...

                                        அவளில்லாத பொழுதுகள் 

 விழிப்பு கடிகையின் அலறல் சத்தத்தில் விடிந்தது அன்றைய பொழுது 
 காலை கதிரவனின் அனலின் வெப்பத்திலும் தனித்தே இருந்தது எனது கைகள்
 எனது கை பிடிக்க அவளில்லை என்ற ஏக்கத்தில்
 விரும்பிய உணவின் சுவையை சிறிதும் சுவைக்க மறுக்கிறது 
 அவளோடு ஊடல் கொண்ட எனது நாக்கு
 உமிழ் நீரும் இங்கு வற்றித்தான் போய்விட்டது 
அவளின் உதடுகளை நெருங்க முடியாததால்  
பேருந்து நிறுத்தத்தின் அவள் புன்னைகைக்காக காத்திருந்த எனது கண்கள் 
இன்று கண்ணீரை மட்டுமே சமர்ப்பணம் செய்கிறது  
ஓடி ஓடி அவளை காண செய்த கால்கள் இன்று முடங்கியே செத்துவிட்டது 
 எப்படி கடப்பேன் இனிவரும் பொழுதுகளை
 தீர்வு தெரிவதுற்குள் வந்து விடு 
  என்றுமே எனக்கிது ஒரு நரக வேதனைதான் 
 நீ இல்லாத பொழுதுகளில்… 
 -ர.வருண்பாலகுமார்

பதிவு : varunbalakumar
நாள் : 21-Dec-16, 11:58 pm

மேலே