எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ்ப் போராளிகளுக்கு எனது வீர வணக்கம்! ஏர் தழுவத்...

தமிழ்ப் போராளிகளுக்கு எனது வீர வணக்கம்!

ஏர் தழுவத் தடை நீங்குமென
ஏங்கி இருந்தோம்
தடை மீறி நடத்திவிட
துணிந் திருந்தோம்!

காக்கிச் சட்டை களமிறக்கி 
சட்ட திட்டம் எனப் பேசி
கொக்கிப் பிடி போட்டு விட்டு
எட்டி நின்ன கழகங்களே!

திமில் பிடிக்க வேண்டுமென
தமிழ்ப் படை திரண்டுவிட
திமிர் பிடித்த கூட்டமொன்று
தமிழன் வீரத்தைச் சீண்டியதே!

காட்டுப் பய கூட்டமென
கர்வத்தால் நினைத்தோரை
கட்டுக்கோப்புக் கூட்டத்தால் 
கலங்கடிக்க விட்டோமே!

மின்னைத் துண்டித்தாய்
விண்ணுக்கே மின் கொடுத்தோம்
இணையத்தை துண்டித்தாய் 
குமையியையே முடக்கி விட்டோம்!

அறவழிப் பாதையினால்
அகிலமே பார்க்க வைத்தோம்
மறவழி வம்சமென்று
மாற்றோரும் பேச வைத்தோம்! 

அரியுடன் மோதச் சொல்லி
ஏறுகளைக் கட்டி வைத்தாய்
சீறி நாங்கள் கூடி விட்டோம்
வரும் தடைகளைத் தகர்த்திடுவோம்!

ஒருமுறை விழித்து விட்டோம்
மறுமுறை உறங்கிடோம்
சிறு வஞ்சகம் நினைந்தாலும்
பெரும் படையெனச் சேர்ந்திடுவோம்!

ஜல்லிக்கட்டு எங்கள் முதல் அடியே
சொல்லி அடிப்போம் அதற்கு முடிவில்லையே!

வெற்றி வேல்!  வீர வேல்!

நாள் : 21-Jan-17, 10:07 pm

மேலே