எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..11 இதயமும் (Heart) மனதும் (Mind) அலைபேசியில்...

சிந்தனை செய்மனமே..11 

  இதயமும் (Heart) மனதும் (Mind)  


அலைபேசியில் (cell phone) ஒரு இடத்தில் (storage) தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது (memory) நிரம்பும்போது, அலைபேசியின் செயல்திறன் வேகத்தை இழக்கும், இதைக் கவனிக்காது விட்டோமானால், அலைபேசி வேலை செய்யாமல் நின்று (hang) விடும்.


நமது மனதும் இதயமும், ஒருவகையில் அலைபேசி போன்றே செயல்படுகிறது.   இதயத்துக்கும் மனதுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. நடக்கும் சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் மனது மறக்கக்கூடும். நடக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும், மனதானது நினைவு வைத்துக் கொண்டால் என்னவாகும்?.. சற்று யோசிக்க வேண்டிய ஒன்று!


ஆனால் இதயம் அப்படிப்பட்டதல்ல, மனதிலிருந்து சற்று வேறுபட்டது.   இதுவும் யோசிக்க வேண்டிய ஒன்று. பேச்சு வழக்கில், இந்த சம்பவத்தை நினைத்து “என் இதயமே வெடித்துவிட்டது” என்று சொல்லக்கேட்டிருக்கிறோம், ஒரு கொடுமையான துயர நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன், இதயம் செயலிழந்து சட்டென இறந்தவர்கள் இருக்கிறார்கள். இதயத்துக்கு உடனடி எதிர்தாக்கம் (reaction) உண்டு, அதனால்தான் சிலருக்கு மாரடைப்பு வருகிறது.


மனதை நம் கட்டுக்குள் எளிதில் கொண்டுவருவதைப்போல,  இதயத்தை அவ்வளவு எளிதில் சாந்தப்படுத்த முடியாது என்பதே அறிவியல் உண்மை.   இப்படி பல நிகழ்ச்சிகளையும் இதயத்தோடும் மனதோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படும்.


பூமியிலிருந்து வெகுதொலைவில் உள்ள நிலவுக்குசென்ற மனிதன் கடந்துவிட்ட தூரம் வெகுதூரம்தான் எனினும், இதயத்துக்கும் மனதுக்கும் இடையே உள்ள சிறிய 14 இன்ச் தூரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கொண்டு...

"மனது" சொல்வதைக் கேட்டு முடிவெடுப்பதா?...

அல்லது

"இதயம்" சொல்வதைக் கேட்டு முடிவெடுப்பதா?..

என்பது  புத்தியுள்ள மனிதனுக்குக் கூட

இதுவரை இன்னும் தடுமாற்றமாகவே இருக்கிறது. 

நாள் : 15-Feb-17, 4:14 pm

மேலே