எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹோலி பண்டிகைகண்ணனுக்கு பிடித்தமான வண்ணம் பல உண்டாம்அத்துணை வண்ணமும்...

ஹோலி

ஹோலி பண்டிகை
கண்ணனுக்கு பிடித்தமான
வண்ணம் பல உண்டாம்
அத்துணை வண்ணமும்
ஓரிடத்தில் கூடுமாமொருநாள்!

விருந்தாவனத்தில் பிறந்தவனுக்கு
விழாயெடுப்பதில் பஞ்சமில்லை
கொஞ்சுவதற் கென்றேயொருவிழாவாம்
ஹோலி யென்றபெயராம்!

வேம்புமஞ்சள் வில்வம்குஞ்குமமென
வகையாய்சேர்த்து பொடிசெய்து
பல வர்ணக்கலர் கொடுத்து
பலர்கூடுமிடத்தினிலே பக்குவமாய்

வண்ணப் பொடிதூவி..நல்
எண்ணம்பல இன்றயெழவைத்து
நெருப்புக்குள் புகுந்துவிழாவாகி
நிலையாகப் புகழுற்றாய்!

பாரதத்தின் பழம்பெருமை
பறைசாற்றும் விழாதான்
தூள்களைத் தூக்கியெறிந்து
துயரங்களைமறக்க வைக்கும்..

விழாதான்! 

ஹோலியெனும்  திருவிழாவாம்!      


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 13-Mar-17, 5:33 pm
மேலே