எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே-17முதலாளியும் (Boss) தொழிலாளியும் (Employees)எந்த ஒரு அமைப்போ...

எண்ணம்

சிந்தனை செய்மனமே-17


முதலாளியும் (Boss) தொழிலாளியும் (Employees)


எந்த ஒரு அமைப்போ (Organisation), தொழிலோ (Industries), அலுவலகமோ (Office) அல்லது அரசியலமைப்போ (Politics)..அங்கே முதலாளி மற்றும் தொழிலாளி என்கிற இருவர்க்கத்தவரும் இணைந்து செயல் படவேண்டிய நியதி ஏற்படுகிறது.

இருவர் என்று நாம் குறிப்பிடும், இந்த “முதலாளி” (boss) மற்றும்  “தொழிலாளி” (employees) என்கிற நபர்கள் எங்கிருந்து தோன்றுகிறார்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன.. சற்று நேரம் சிந்திப்போமா?..

முதலில் இருவருக்கும் எழுகின்ற பொதுவான கேள்விகளை நேர்மறை எண்ணங்களோடு சிந்திப்போம்.

ஒரு முதலாளி என்றவுடன் அவரைப் பார்த்து ஒரு தொழிலாளி ஏன் பயப்படவேண்டும். “நான்” (“I”) என்கிற அதிகாரத்துவத்தை அவர்களுக்கு யார்?..வழங்கினார்கள்.

தொழிலாளி அல்லது ஊழியர்கள் என்று வரும்போது இதே நான் என்பது “நாம்” (“we”) என்று மாறுவது ஏன்?..

ஒரு முதலாளியும் தொழிலாளியும் இணைந்து மேற்கொள்ளுகின்ற ஒரு காரியத்தில், ஒரு தடங்கலோ, தடையோ அல்லது தோல்வியோ வரும்போது தொழிலாளியிலிருந்து உயர்வு பெற்று முதலாளியானவரிடத்தில் சட்டென்று “நான்” என்கிற அகம்பாவம் ஏன்?..தோன்றுகிறது.

ஒரு நியாயமான செயலால் நிகழும் தவறோ, அல்லது அறியாமல் செய்கின்ற பிழையோ வருகின்றபோது, முதலாளியிடத்தில் தவறுகள் இருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் தோல்விக்கு (failure) முற்றிலும் தொழிலாளிதான் காரணம் என்கிற முடிவுக்கு வருவது ஏன்?..

அதேபோல எடுத்த காரியத்தில் “வெற்றி” என்று வரும்போது, அங்கே முதலாளியினுடைய மதிப்புதான் ஓங்குகிறதே தவிர, வெற்றிக்குக் காரணமான தொழிலாளியின் பங்கு, பலராலும் பாராட்டப்படுவதில்லை.  
 
ஒரு அமைப்பின் (Organisation) முழுநலனுக்காக (welfare) இருவரும் சேர்ந்து உழைக்கின்ற இடத்தில் இத்தகைய பாகுபாடு வரக் காரணம் என்ன?..

இருவருமே இணைந்து பெறும் வெற்றியும் தோல்வியையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டால் அது இருவருக்கும் கிடைக்கும் வெற்றி மட்டுமல்ல, அந்த அமைப்பிற்குக் கிடைக்கும் வெற்றிக்கு வழிவகுக்கும் அல்லவா?..

இது ஏன் நடைமுறையில் இன்று வரை சிக்கலாகவே இருக்கிறது?..

இம்மாதிரியான சூழ்நிலை இல்லாத அமைப்பு  இன்றளவும் இல்லை என்று கூடச் சொல்லலாம். 

இருவருக்கும் இணக்கமான உறவை உறுதியாக்கி, அந்த வழிமுறையை முறையாகப் பின்பற்றி தான், ஜப்பான், சீனா முதலிய நாடுகள் வேகமாக முன்னேறி வருகிறது. 

ஜப்பானில் ஒரு வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது, ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகத்தில் முதலாளியும் தொழிலாளியும் பங்குபெறும் கூட்டத்தில், முதல் நாள் அலுவலகத்தில் சந்தித்த தொழிலாளிகளின் பிரச்சினையை அதிகாரிகள் கேட்டறிந்து, அதை அன்றே களைந்த பிறகுதான், அன்றய தொழிலை மேற்கொள்ளுகின்றனர்.

இந்த வழிமுறை நம் நாட்டிலும் வந்தால், நமது நாடும் முன்னேறும். நமது விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளருமான மறைந்த கலாம் அய்யாவின் கனவு மெய்ப்படும்.

இம்மாதிரி சிந்தனைகளுக்கு இன்றுவரை சுமூகமான முறையில் விடையில்லாமல் தவிப்பதுதான் இன்றய அமைப்பின் (an organization) சூழ்நிலை (situation).

இந்தப் பதிவைப் படிக்கின்ற ஒரு முதலாளி அல்லது தொழிலாளி அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தங்களது அலுவலக அனுபவங்களையும், சிந்தனைகளையும் பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம்.


boss is always right க்கான பட முடிவுRate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 18-Mar-17, 10:59 pm
மேலே