எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையுடன் ஓர் இரவு மனிதர்கள் சத்தம் இல்லை பறவைகள்...

இயற்கையுடன் ஓர் இரவு
மனிதர்கள் சத்தம் இல்லை பறவைகள் புரியாது அதாவது தெரியாத மொழியில் குரலில் தேன்பட்டது போல் சத்தத்தோடு பேசிக்கொண்டு இருந்தன. நிலவு ஒளிகள் கண்ணை கூச தென்றல் காற்று கண் இமையை தட்டி வணக்கம் சொல்லி பூப்போல அசைந்தது. மெல்ல மெல்ல கண் திறந்து எழுந்தேன். கண்ணை நன்றாக திறந்து பார்த்தேன். சுற்றி வெறும் மரங்கள் கொடிகள், மின்மினி அறியாத வகை பூச்சிகள் சுற்றி சுற்றி வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவது போல என் மனதில் ஒரு புள்ளி எண்ணம். நான் இங்கு ஏன் வந்தேன் இது என்ன இடம் இங்கு எப்படி வந்தேன் என்று விடையில்லா கேள்வி எழுந்தன. ஆனால் இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு அமைதியை பார்த்ததில்லை. அந்த இருட்டில் மெல்ல எழுந்தேன். கால்கள் எல்லாம் காட்டை விட்டு வெளியே போகலாம் என்று துரத்த ஆனால் மனது சுற்றி பார்க்க மிகவும் ஆசை. தெரிகின்ற நிலவு ஒளியில் போனால் ஏதாவது ஆபத்தா இது போன்ற எண்ணங்கள் வட்டம் அடித்தன. சட்டென்று என் முன்னே ஒரு மின்மினி பூச்சி இங்கே வா என்று கூப்பிடுவது போல ஒரு அழைப்பு, அதை பொருட்படுத்தவில்லை. மீண்டும் என் முன்னே வந்து கிழக்கு திசையில் சென்று சென்று வந்தது. என் மனம் போ என்று கூறியது, நானும் அதன் பின்னே சென்றேன். வழியெங்கும் உள்ள செடி, கொடிகள் எல்லாம் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக, சந்தோஷமாக, மற்றும் அமைதியாக என்கிற கர்வத்தில் உறங்கி கொண்டு இருந்தன. இதுபோன்று ஏன் மனிதர்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், சந்தோஷமாகவும் இல்லை. ஏன் இறைவன் எல்லாரையும் இப்படி படைத்தான். திடீரென்று மின்மினி ஓரிடத்தில் நின்றது. அங்கு மிக நீளமான பெரிய செடி, மின்மினி என் கண்முன்னே வந்து கண்ணை சிமிட்டி அந்த செடிக்குள் பார் என்று அந்த செடி மீது அமர்ந்தது. நான் அருகில் செல்ல செல்ல அருகில் உள்ள மரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்தது. நான் அந்த இருட்டில் உத்து பார்த்துக்கொண்டு இருந்தேன். தன் நான்கு நண்பர்களோடு ஒளி கொடுத்தது. அந்த ஒளியில் பார்த்தபோது ஒரு பை இருந்தது. அந்த பையில் ஒரு கம்பளி ஊசி போன தின்பண்டம் இருந்தது. அந்த கம்பளியை அந்த செடிக்கு அருகில் விரித்து அதில் அமர்ந்து உன் தோழன் எப்போது வருவான் என நிலாவிடம் வினவினான். பக்கத்தில் இருந்த வர்ணிக்க இயலாத நட்சத்திர கூட்டம் சொல்லமாட்டேன் என்று நகர்ந்தது. காடு என்பதால் சிறிது பயம் எனக்கு இந்த வயதிலும் சின்ன நடுக்கம். என் தந்தை எனக்கு பயம் அறியாமல் இருக்க பல கதைகள் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போது கொஞ்சம் பயம் நள்ளிரவு நேரம் அல்லவா, அருகில் சின்ன சலசலப்பு சத்தம். மெதுவாக கீழே இருந்த மரக்குச்சியை எடுத்துக்கொண்டு அந்த சலசலப்பு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றேன். அழகான ஒரு நீரோடை, அருகில் ஒற்றை கிளை கொண்ட மரம். அதில் மூன்று பூக்கள், அதில் இரு மான்கள் நீர் பருகிக் கொண்டு இருந்தன. சொர்கத்தை முதன்முதலாக கண்டேன் என்ற பெருமிதம் நெஞ்சில் துள்ளி குதித்தது. ஒரு கண்ணில் நீர் வடிய என் குடும்ப ஞாபகம் என் முன்னே வந்தது. அந்த கம்பளி இருந்த இடத்திற்கு சென்றேன். என் மனைவி நிவேதா என்னை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறாள். எனது மகள் திவ்யாவை பார்த்து பல நாட்கள் ஆகிறது. நான் ஒரு தமிழ் வாத்தியார், அந்த வேலையை விட்டுவிட்டு என் மனைவியின் தம்பி அருண் உடன் சேர்ந்து பிஸினெஸ் பார்த்துக்கொண்டு வந்தேன். எப்போதும் இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு போவேன். இதுவே என் குடும்பம் என்னை விட்டு பிரிய காரணம். ஒருநாள் என் மகள் திவ்யா நான் குடிபோதையில் இருக்கும்போது தான் வரைந்த ஓர் அழகான ஓவியம் ஒன்றை காட்டினாள் அதை கிழித்து விட்டேன். ஆனால் அந்த ஓவியம் இன்றுவரை என் மனதில் அப்படியே பதிந்துள்ளது. அவர்கள் நாகர்கோவிலில் வசிக்கிறார்கள். இங்கு வேலை அதிகமாக இருப்பதால் நான் அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த இரவில் மீண்டும் மின்மினி எங்கேயோ கூப்பிடுவது போல் என்னை அழைத்தது. எனக்கு அந்த மின்மினி மீது கோபம் எதற்கு அழைக்கிறது என்று குழப்பம், சட்டென்று என் பின்னே சென்றது, திரும்பி பார்த்தல் ஒரு பாம்பு நகர்ந்து வந்தது, கையில் இருந்த மரக்குச்சியால் அந்த பாம்பை எடுத்து சிறிது தூரத்தில் விட்டுவிட்டேன். இதற்கும் காரணம் என் தந்தையே, சிறுவயது முதலே விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்று சொல்லி வளர்த்தார். நான் சரியான தந்தையாக இருக்காமல் போய்விடுவேனோ என்று அச்சம் வேகமாக எழுந்து காட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் எழுந்து போகும்போது அந்த மின்மினி எனக்கு முன்னே பறந்து சென்றது. அது செல்லும் வழியில் நானும் சென்றேன், காடு என்றதால் கையில் இருந்த மரக்குச்சியை இறுக்கிப்பிடித்து கொண்டு பூமியை பார்த்துக்கொண்டு நடந்தேன். பொழுது விடிந்து விட வேண்டும் விடியலை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் மின்மினியை பின் தொடர்ந்தேன். தூரத்தில் ஒரு ஒளி அனேகமாக அதுதான் வழி என்று அந்த திசையை நோக்கி நடந்தேன். ஆனால் அந்த மின்மினி போகாதே போகாதே என்று கூறுவது போல உணர்ந்து அதை பொருட்படுத்தாமல் அந்த ஒளி வந்த திசையை நோக்கி நடந்தேன். தூரத்தில் எதோ ஒரு பெரிய உருவம் என்னை நோக்கி வந்தது. மனிதன் என்று நினைத்தால் ஒரு காட்டெருமை நிலவொளி அதன் கொம்பின் மீது பட்டதால் ஒளி போல காட்சியளித்தது. கண் இமைக்கும் நேரத்தில் என்னை விரட்டியது. நான் அதனிடம் தப்பிக்க ஓட்டம் எடுத்தேன். அருகில் இருந்த நீரோடையில் குதித்து அடுத்தப்பக்கம் எழுந்து போனேன். எழுந்து சுற்றி பார்க்கும்போது மின்மினி என் முன்னே நக்கல் சிரிப்பு இட்டது. மீண்டும் அதுவே வழி காட்டியது. அது காட்டிய வழியில் போகும்போது பல வினோத சத்தம், வேகமாக நடந்தேன். தூரத்தில் ஒரு பாதை அந்த பாதையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு சின்ன அறை அதில் சின்ன வெளிச்சம் தெரிந்தது. அங்கு போய் அந்த கதவை தட்டினேன், தூக்க கலக்கத்தில் ஒரு வயதானவர் கதவை திறந்தார். யாருப்பா நீ இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டார். நான் எப்படி இங்கு வந்தேன் என்று தெரியவில்லை, பொழுது விடிந்தபிறகு நான் போய்விடுகிறேன் என்றேன். உள்ளே வா என்றார். உள்ளே போனால் சின்ன அறை நீங்கள் யார் என்றேன். இந்த காட்டுக்கு கண்காணிப்பாளர் என்றார். காட்டுக்கு உள்ளே இருந்து வருகிறாயா என்று கேட்டார் ஆமாம் பெரியவரே என்றேன். அருகில் இருந்த லாந்தர் விளக்கில் அந்த மின்மினி அமர்ந்தது. அதை பார்த்து சிரித்தேன். அந்த பெரியவர் உறங்கிவிட்டார். நான் என் குடும்பத்தோடு இருக்கும்போது ஏற்பட்ட சந்தோஷத்தை நினைத்து கொண்டு இருந்தேன். உள்ளே இருந்த ஒரு நோட்டில் இருந்த பேப்பரை எடுத்த என் மகள் வரைந்த ஓவியத்தை அப்படியே தீட்டினேன். இதை என் மகளிடம் காட்ட என் மனம் ஏங்கியது. காகம் கரைந்த சத்தம் செவிகளில் எட்டியது. பெரியவரிடம் சொல்லாமல் புறப்பட்டேன் என் வீட்டிற்கு. உடனே நாகர்கோவிலுக்கு பஸ் ஏறினேன். என் மனைவி வீட்டிற்கு வெளியே நின்றேன். உள்ளே ஒரு குரல் அது என் மகள் குரலே. நான் விளையாட போகிறேன் என்று கையில் அவள் எப்போதும் ஓவியம் தீட்டும் நோட்டு மற்றும் எப்பொழுதும் வைத்திருக்கும் கரடி பொம்மை வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். என்னை பார்த்து அப்பா என்று ஓடி வந்தாள். அவளை கட்டித்தழுவி என் செல்லகுட்டிக்கு முத்தம் கொடுத்தேன். இனி அப்பா உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன். உன் ஓவியத்தை போல எப்போதும் உன்னோடு இருப்பேன் என்று கூறி தன் கையில் வைத்திருந்த ஓவியத்தை நீட்டினேன். உள்ளே போனால் நிவேதா, அருண் நின்றிருந்தனர். நீ வருவாய் என்று எனக்கு தெரியும் என்றான். எப்படி என்றான் ராஜா. உன்னை காட்டில் விட்டதே நான்தான் என்று கூறினான், ஓர் இரவு இயற்கையோடு இருந்தால் மிருகமும் மனிதன் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே, நீயும் குடியை விட்டுவிட்டு உன் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்றான் அருண். இதுபோல் நானும் பத்து நாட்களுக்கு முன்பாக என் நண்பனால் தனியாக விடப்பட்டேன். பணம் தான் வாழ்க்கை என்று நாட்களை வீணடிக்காதீர்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ இந்த கலியுகத்தில் வாழ முயற்சி செய்யுங்கள். - முற்றும்

நாள் : 19-Mar-17, 12:07 pm

மேலே