எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----------------------------------------காப்பு------------------------------------------- நம் தமிழ் மொழியே ஒரு அலாதி மொழி...

           ----------------------------------------காப்பு-------------------------------------------

 நம் தமிழ் மொழியே ஒரு அலாதி மொழி .இங்கிலீஷைத் தமிழில் எழுதினா ஒரு பொருள் . தமிழிலே அது மாதிரிச் சொல்லுக்கு 
பல பொருள் இருக்கும் . அப்படி இந்த காப்பு.                  

காப்பாய்வு : 

காப்பு : 1
நீங்க சொன்னீங்க காப்புன்னா கை விலங்கு . சரி . 
அது மட்டும்தானா , நிறைய இருக்கு 
ஐயர்கள் கோவில்ல கையை நீட்டற வங்களுக்கெல்லாம் காப்பு கட்டி விடுவாங்க. சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு கருப்புன்னு . 
அரசியல் வாதிகள் பிரபல்யமானவர்கள் கையைப் பாத்தீங்கன்னா தேர் வட்டம் மாதிரி சுத்தியிருப்பாங்க ..எதுக்கு 
காத்து கருப்பு தீண்டிடுச்சுன்னா ....? எல்லாம் ஒரு பாதுகாப்புதான் ! 
ஒரு சந்தேகம் கால்ல ஏன் காப்பு கட்டறதில்ல ? 
காப்பு 2 : 
பெண் தாய்மையுற்ற ஏழாவது எட்டாவது மாதத்தில் அவள் கையில் தாய் மற்றும் தோழியர்கள் வளையல் அடுக்கி தாய்மையுற்ற 
அழகையும் மழலை பிறக்கப் போகும் மகிழ்ச்சியையும் விழாவாகக் கொண்டாடுவார்கள்.அந்த விழாவிற்கு வளைகாப்பு அல்லது 
வளைகாப்பு சீமந்தம் என்று பெயர்.கர்ணன் படத்தில் விழாவை ஒரு பாடல் காட்சியில் காட்டியிருப்பார்கள் .அதில் 
கண்ணதாசனின் பாடல் வரிகள் இவ்வாறு செல்லும் ...மஞ்சள் பூசி திலகமிட்டு வளையல் பூட்டி வா வென்று வாழ்த்து பாடுவேன் . 
காப்பு 3 : 
குழந்தை பிறந்ததும் அத்தை மாமன் எல்லோரும் ஒன்று கூடி குழந்தைக்கு கைகளில் தங்கள் காப்பிடுவார்கள் .இதுவும் ஒரு விழாதான் . 
காப்பீட்டு உற்றார் உறவினர் ஊர் மக்களுக்கு காப்பரிசி வழங்குவார்கள் . 
மனிதன் குழந்தையாய் பிறந்து நெடிது வாழ்ந்து பிராணன் போன பின் உற்றார் உறவினர் அரிசி வழங்குவார்கள் , எங்கே ? வாயில 
உள்ள போகுமா சரிந்து கீழ விழும்.அதற்கு பேர் வாக்கரிசி . பிராணன் போன பின் என்ன காப்பு. 
பிறக்கும் போது காப்பரிசி இறக்கும் போது வாக்கரிசி . 
அன்னம் பிராண மயம் ; பிராணன் போன பின் அரிசிக்கு ஏது மயம் ? 
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு 
நல்லவர்க்கும் ஏழையார்க்கும் ஆணடவனே காப்பு ------என்று பாடுவார் கண்ணதாசன் . 
--- கவின் சாரலன்  

நாள் : 25-Mar-17, 3:00 pm

மேலே