எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மின்னணு ஊடகமும் இணையமும் இணைந்து எழுத்து-வாசிப்பை பலமடங்கு பெருக்கிவிட்டன....

மின்னணு ஊடகமும் இணையமும் இணைந்து எழுத்து-வாசிப்பை பலமடங்கு பெருக்கிவிட்டன. விளைவாகவே நூல்களும் அதிகளவில் விற்கப்படுகின்றன

ஆனால் பள்ளிகளில் தமிழ்க்கல்வி இல்லாமலாகி வருவதனால் தமிழ் வாசிப்பு பின்னடைவு கொள்கிறது. புதியதலைமுறையில் தேர்ந்த மாணவர்கள் தமிழில் வாசிக்கும் வழக்கமோ பயிற்சியோ அற்றவர்களாக உள்ளனர்.

ஆகவே ஒட்டுமொத்தமாக தற்காலிகமான ஒரு வளர்ச்சி உள்ளது. . ஆனால் இந்த வாசகர் வட்டம் அடுத்த தலைமுறையில் நீடிக்குமா , தமிழ் வாசிப்பு இருக்குமா என்பதெல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. இப்படியே போனால் நீடிக்காது. தமிழ் வெறும் பேச்சுமொழியாகச் சுருங்கிவிடும் வெறுமே தமிழ்வாழ்க என்று கூச்சலிட்டு பயனும் இல்லை. ஆனால் வேறேதும் ஒரு அலை கிளம்பும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.

எழுத்தின் தரம் என்பது எழுதும் மனநிலையின் தீவிரத்தை மட்டுமே சார்ந்தது. படைப்புமனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது தான் முக்கியம்.நாள் : 24-Apr-17, 7:30 pm

மேலே