எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ் நம் நம் நாட்டைக்...

பாகுபலி படத்தின்

பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ் நம் நம் நாட்டைக் காக்கும் வீரர்களின் தியாகத்தைப் பாராட்டி

 ரூ.120/- கோடிக்காண காசோலையை  பிரதமர் மோடி அவர்களிடம் வழங்கியுள்ளார். மராட்டிய மண்ணின் மைந்தரான சிவாஜி ராவ் இயக்குநர் பாலச்சந்தர் அவர்களால் ரஜினிகாந்த் ஆகி இன்று சூப்பர் ஸ்டாராக உள்ளார். இவரும் நடிகர் விஜய் அவர்களும் ஒவ்வொரு படத்துக்கும் சில கோடிகளை சம்பளமாகப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் தமிழ்த் திரையுலகில் ரஜினி அவர்கள் முதல் இடத்திலும் விஜய் அவர்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் நாட்டுக்கோ தமிழர்களுக்கோ  அவர்கள் உழைப்பில் கிடைத்த பணத்திலிருந்து      ஏதாவது நல்ல காரியங்களைச் செய்திருக்காரர்களா என்று தெரியவில்லை. தெரிந்த நண்பர்கள் அவர்கள் அறிந்த உண்மையை இங்கு பகிரவும். நடிகர் சிவகுமார் குடும்பம் அகரம் என்ற அமைப்பின் மூலம் சேவை செய்துவருகிறது. எம்ஜிஆர் அவர்கள் மலையாளியாக இருந்தாலும் தனது உழைப்பின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வாரி வழங்கினார். இன்றும் அவரது அறக்கட்டளை மாற்றுத்திறானி குழந்தைகளை வைத்து பராமரிக்கிறது. 1950களுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரக இருந்த தியாகராஜ பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் கணக்கு வழக்கின்றி வாரி வழங்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இயற்கை எய்தினார்களாம். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் ஒரு ஏழைப் பெண்ணின் பெற்றோர் தன் மகளின் திருமண அழைப்பிதழை என்எஸ்கேவிடம் கொடுத்தபோது கடைசியாக தன்னிடம் இருந்த வெள்ளியால் செய்யப்பட்ட வெற்றிலை பாக்கு பெட்டியைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினாராம்.


Rate Up 0 Rate Down 0
Close (X)

பதிவு : மலர்1991 -
நாள் : 7-May-17, 6:17 pm
மேலே