எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படிக்க சித்திரை முழுநிலவு நாள் இந்திர விழா, கோவலன்-...

படிக்க

தமிழர்களின் பெருமைக்குரிய வரலாற்று சின்னமான கண்ணகி கோவில் சிதிலமடைந்து வருகிறது சீரமைப்பு பணிகள் நடைபெறுமா?

சித்திரை முழுநிலவு நாள் இந்திர விழா, கோவலன்- மாதவி வாழ்வில் நடந்தது

http://swaminathanmanamenumvanveli.blogspot.in/2014/05/4.தம்ள

தமிழர்களின் பெருமைக்குரிய வரலாற்று சின்னமான கண்ணகி கோவில் சிதிலமடைந்து வருகிறது சீரமைப்பு பணிகள் நடைபெறுமா?

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்,

தை திங்கள் முதல் நாள் தான்  தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள்.

அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியில் தமிழக மக்களால் கனவில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.
 சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும்புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நாம் நமது இலக்கை அடைவதற்காக அயராது உழைப்போம்


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 19-May-17, 5:00 pm
மேலே