அனைத்து பேதங்களையும் கடந்து நீந்திக்கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு...
அனைத்து பேதங்களையும் கடந்து நீந்திக்கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்போம்
08-06-2017 11:36:00
எமது மண்ணில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர இன அழிப்பின் சாட்சியங்களாக வெளிவரவிருக்கும் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு அனைத்து பேதங்களையும் கடந்து ஆதரவளிப்பது எமது வரலாற்று கடமைகளில் ஒன்று என கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாச்சார அபிவிருத்தி அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் தேசத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய 'பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு' எனும் ஆவணப்பதிவின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.