எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ உண்ணும் உணவில் உன்னால் மதம் பார்க்க முடியுமா...


நீ உண்ணும் உணவில் உன்னால் மதம் பார்க்க முடியுமா ...?
முடியாது .
நீ உடுத்தும் உடையில் உன்னால் மதம் பார்க்க முடியுமா ...?
முடியாது .
நீ வாழும் வீட்டில் உன்னால் மதம் பார்க்க முடியுமா ...?
முடியாது .
இப்படி எதிலேயும் உன்னால் மதம் பார்க்க முடியாது ...
ஆனால் உனக்குள் மட்டும் ஏனோ மதம் இருக்கிறது ...

உன் மதமும் இல்லை ...
என் மதமும் இல்லை ...
இறைவன் மனிதம் என்னும் இயற்கை ...

மனிதன் பிறந்த பின்பே மதம் பிறந்தது ...
மனிதன் நீ என்றால் உனக்குள் மனிதம் இருக்க வேண்டும் ...


மதம் என்பது கடவுளை வழிபடும் முறையே அன்றி வேறொன்றும் இல்லை ...
எல்லா மதத்தின் வேதங்களும்  சொல்வது ஒன்றே ஒன்றை தான் ...
உயிர்களிடத்தில் உண்மையாக இரு ...

நான் மனிதனை மதிக்கிறேன் ...
அந்த மனிதன் மனதில் அழுக்கு இல்லை ...
அவன்  கடமையில்  அவன் சரியாக இருக்கிறான்  ...
இன்னொருவரின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பதில்லை ...


உன் அடையாளம் உனக்குள் இருக்கும் மதம் அல்ல ...
உன் தாய் மொழி ...
தாய் மொழி காப்போம் ...
அது தமிழாகத் தான் இருக்க வேண்டும் என்றல்ல ...
எந்த மொழியும் அழிந்து விடக்கூடாது ...

~ பிரபாவதி வீரமுத்து

நாள் : 2-Jul-17, 3:09 pm

மேலே