எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..22 முயற்சியும் (effort) மழைத்துளியும் (raindrop) எந்த...




சிந்தனை செய்மனமே..22




முயற்சியும் (effort) மழைத்துளியும்
(raindrop)




எந்த ஒரு நிகழ்ச்சியையும் நம் வாழ்க்கையோடு
ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் புதைந்திருக்கும் உண்மைகளை நாம் உணரமுடியும்.



மழைத்துளி என்பது உருவத்திலும் அளவிலும்
மிக மிகச் சிறியது, உள்ளங்கையில் ஏந்திப் பார்த்தால் ஒரு முத்து அளவே இருக்கும். ஆனால்,
தொடர்ந்து மழைத்துளிகள் விழும்போது பெருமழையாகி பெருவெள்ளத்தைத் தருகிறது.



முயற்சி என்பதும் ஒருவகையில் மழைத்துளி
போலாகும்.. தொடர்ந்து மழைத்துளிபோல, சிறிய அளவில் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும்
ஒன்று கூடும்போது, பெருவெள்ளம்போல் அது சாதனையாகிவிடுகிறது.



உங்கள் வாழ்க்கையிலும், ஏதாவதொரு சாதனை
புரிந்தீர்ப்பீர்கள் அல்லவா.! சாதனைக்குப் பின்னால் நீங்கள் எடுத்த மழைத்துளி போன்ற
முயற்சிகளை இப்போது சிந்தித்துப் பார்க்கலாமே..?. உங்கள்
எண்ணங்கள் பெருக்கெடுத்தோடும்.




நாள் : 15-Jul-17, 10:14 pm

மேலே