எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..25 புரிதலும் (understanding ) அறிதலும் (knowing)...



சிந்தனை செய்மனமே..25



 



புரிதலும்
(understanding ) அறிதலும் (knowing)





அனுதினமும் நாம் எத்துணையோ நபர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களோடு பேசுகிறோம்,
உறவாடுகிறோம், அளவளாவுகிறோம்.



அவ்வளவு பேரும் நமக்குத் தெரிந்தவர்களாகவோ அல்லது இதற்கு முன் அறிமுகமாகதவர்களாக
இருக்கலாம், ஆனால், மற்றவரிடம் பேசும்போது என்ன சொல்கிறோம், “எல்லோருமே தெரிந்தவர்தான்,
நண்பர்தான்” என்றுதான் சொல்லிப் பெருமைப் பட்டில் கொள்கிறோம்..



உண்மையில் உங்களை எண்ணற்ற நபர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டாலும் அல்லது
அறிந்திருந்தாலும், அதில் எத்துணைபேர்
உங்களைப் புரிந்து கொண்டிருபார்கள் என
ஒரு கணம் சித்தித்துப் பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவிலேதான் புரிந்து கொண்டு
பழகுபவர்கள் இருப்பார்கள்.



ஆக, புரிதல் என்பது
அறிதலைவிட ஆழமானது..



இதை, இனிமையாக தமிழில் சொல்வதைவிட, ஆங்கிலத்திலே அலட்டலாக..



“Understanding
is deeper than knowing”..



என்பார்கள்...

============

நன்றி:: கூகிள் இமேஜ்



நாள் : 29-Jul-17, 8:26 pm

மேலே