எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

!!!குலம்!!! தேனிக்கு தெரியும் மலரின் குலம்! வாணிக்கு தெரியும்...

  !!!குலம்!!!


தேனிக்கு தெரியும் மலரின் குலம்!
வாணிக்கு தெரியும் வீணையின் குலம்!
கழனிக்கு தெரியும் கதிரின் குலம்!
கலப்பைக்கு தெரியும் கரிசலின் குலம்!
அகப்பைக்கு தெரியும் கலவையின் குலம்!
சிவப்புக்கு தெரியும் - எங்கள்
கருப்பின் குலம்!
தண்ணிருக்கு தெரியும் 
தெப்பையின் குலம்!
குளத்திற்கு கூட தெரியும் 
கயலின் குலம்!
அத்தனை தெரிந்தும் - அவைகள்
அழகாய் உறவாடும் –ஆனால்!!
நீ மட்டும் ஏனடா?
வெள்ளை கோட்டின்
கள்ளதனத்தில் அகப்பட்டாய்
காவியே! உன்னைத்தான்!

---!!கரம்பயம் அருண்!!---  

பதிவு : M.L.ARUN
நாள் : 3-Aug-17, 6:14 am

மேலே