எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

M.G.Rஆயிரம் தலைவர்கள்அணிவகுத்து வந்தாலும்மக்களின் மனங்களில்மறையாத மன்னரிவர்.எல்லா மகன்களுக்கும்இவர் இரண்டாம்...

  M.G.R
ஆயிரம் தலைவர்கள் அணிவகுத்து வந்தாலும் மக்களின் மனங்களில் மறையாத மன்னரிவர்.
எல்லா மகன்களுக்கும்இவர் இரண்டாம் தந்தைஏழை எளியோருக்கு இவர் முதல் கடவுள்.
கவிஞர்கள் பலரை தூக்கிவிட்டவரும்அறிஞர்களால் அதிகம் போற்றப்பட்டவரும் இவரே.
பூப்போன்ற மனதாலும் புரட்சிகர எண்ணத்தாலும்புதுமைகள் செய்திட்டபுரட்சித் தலைவரிவர்.
பேரழகுப் பெண்களை பாசத்தால் கவர்ந்தவர் படங்கள் மூலம் பாடங்கள் சொன்னவர்.
நேற்று இறந்தவரையேநினைக்காத நெஞ்சங்கள் இவரை யோசித்தால்நீர்பொழியும் கண்கள்.
மக்கள் கூட்டம் கொண்டாடியத் தலைவரும் மாணவக் கூடங்களில் கொண்டாடப்படுபவரும் இவரே.
மண்ணை மட்டும் ஆளும் தலைவர்கள் மத்தியில் மக்கள் தலைவரெனபெயரெடுத்தவர் இவரே.
மெரினாவில் துயில்கிறது இவரது உடல் நினைக்கையில் கொதிக்கிறதுஉள்ளுக்குள் கடல்.
ஓட்டுக் கேட்பவர்கள் ஜெயிப்பது இந்தக்காலம்ஓட்டுப் போட்டவர்கள் ஜெயித்தது இவரின் காலம்.
ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டேஆட்சியை வென்றதால் அகிலத்துக்கு மட்டுமல்ல ஆண்டவனுக்கும் தலைவனே !
-வினோத்


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : Vinoth
நாள் : 12-Aug-17, 4:36 pm
மேலே