எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதல் கை சேருமா???யாரும் இல்லா நடைபாதையில் பௌர்ணமி...


என் காதல் கை சேருமா???

யாரும் இல்லா நடைபாதையில்   
பௌர்ணமி இரவில், பனி விழும் மார்கழி  குளிரில்
உன் விரல் பிடித்து, உன் தோள் சாய்ந்து ,
கண் மூடி
இரவு வண்டின் ரீங்காரம் கேட்க,
 
தூரத்தில் எங்கோ நாய்கள் குறைக்க,
 
நமக்கு பிடித்த இசையை இனிமையாக இசைக்க விட்டு
 
நாணம் என்னை திண்ண,
 
உன் முகம் பார்க்க முடியமால் தவிக்க
வார்த்தைகள்  தந்தியடிக்க,
 
மௌனத்தை மட்டும் துணைகொண்டு,
 
என் மூச்சு காற்றே என்னை அச்சப்படுத்த
ஆழ்ந்த மூச்சுகள் பல எடுத்து,
 
இமை தாழ்த்தி,இதழ் கடித்து மறைத்து,
 
உள்ளங்கை வியர்வையில்  நனைத்து கை குட்டையில் மறைத்து,
 உன் விரல் ஸ்பரிசம் என்னை  தீயாய் தகிக்க 
 என்னை நானே தடுக்கவும் முடியாமல் 

உன்னை தவிர்க்கவும் முடியாமல்
 
 கண்களில் நீர் முத்துக்கள் சரம் தொடுக்க
 
 உன் ஒற்றை பார்வையில் தொய்ந்து
 
 என் காதலை உன்னிடம்  பகிரும் நிமிடம்

என்ன செய்வாய் நீ?
 
 ஆம் என்பாயா? இல்லை என்பாயா? 
 -மதி    


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : Madhumathi
நாள் : 12-Aug-17, 8:17 pm
மேலே