எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓணம் பண்டிகை வரலாறு கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி...

ஓணம் பண்டிகை வரலாறு

கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மகாபலியை சோதிக்கும் வகையில் மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து மகாபலி மன்னரிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு மகாபலி மன்னன் சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக எழுந்து உலகை இரண்டே அடியில் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி தனது வாக்கை காப்பாற்றும் வகையில் மூன்றாவது அடியை அளக்க தனது தலையைக் கொடுத்துள்ளார். அப்போது உனது தலையை நான் அளந்தால் நீ இறந்துவிடுவாயே என்று கூறிய மகாவிஷ்ணு, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டுள்ளார். அதற்கு மகாபலி ஒவ்வோர் ஆண்டும் திருவோண நாளின் நான் இந்த நாட்டு மக்களைச் சந்திக்க வருவதற்கு வரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணுவும் மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு மகாபலியின் தலையை மூன்றாவது அடியாக அளந்ததாகவும், பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வோர் ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அத்தப்பூ கோலம்:

இதில் திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்கும்விதமாக வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும் விதவிதமான பூக்களிலான பூக்கோலம் இடுகின்றனர்.குமரி மாவட்டத்தில் வீடுகள், பள்ளிக் கல்லூரிகள், கோயில்கள் ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணத்தை வரவேற்கும் செயல்கள் உற்சாகத்தோடு தொடங்கப்பட்டுவிட்டன.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 29-Aug-17, 11:11 am

மேலே