எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குட்டிக் கதை. ஒரு துறவி இமயமலைமீது ஏறிக்கொண்டிருந்தார். தோளில்...

                    குட்டிக் கதை.     



ஒரு துறவி இமயமலைமீது ஏறிக்கொண்டிருந்தார். தோளில் துணி மூட்டை, ஒரு கையில் கமண்டலம் – தண்டம். இன்னொரு கையில் ஊன்றுகோல். இவ்வளவுதான் இவரது சுமை. நண்பகல். செங்குத்தான ஏற்றம். துறவி வியர்வையில் நனைந்திருந்தார். சற்று முன்னால் ஒரு சிறுமியும் மலை ஏறுவதைப் பார்த்தார். பத்து- பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவள் தோளில் தம்பியைத் தூக்கிவைத்து ஏறிக் கொண்டிருந்தாள். ஆறு – ஏழு வயதுச் சிறுவன். நல்ல பருமன். அவள் உடலிலும் வியர்வை வெள்ளம்.   துறவி பரிதாபப்பட்டார். “ மகளே, பெரிய சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டு போகிறாயே கஷ்டமாக இல்லையா?, என் மூட்டையே எனக்கு பாரமாக இருக்கிறதே. ” என்றார்.   சிறுமி திடுக்கிட்டுத் திரும்பினாள். துறவியைக் கண்டாள். சிறுதுணி மூட்டையையும் கவனித்தாள். புன்முறுவலுடன் சொன்னாள். “ சாமி, உங்களுக்கு அந்த மூட்டை பாரமாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை. ஏன்னா இவன் என்னோட தம்பி. ” என்றாள். ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 211. 
 தகவல் ; ந. க. துறைவன். 

பதிவு : துறைவன்
நாள் : 4-Sep-17, 12:37 pm

மேலே