எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நலம் தரும் நவராத்திரி விழா அகில உலகத்தின் அனைத்துமாக...

நலம் தரும் நவராத்திரி விழா

அகில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் ஒப்பற்ற விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன.  புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும். ஆனால் இந்த ஆண்டு ஒன்பது நாட்களோடு இன்னும் இரண்டு நாட்கள் சேர்ந்து நவராத்திரியை சிறப்பாக்குகிறது.

நவராத்திரி நாட்களில், ஒவ்வொரு நாட்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக, பெண் குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். குழந்தைகள் முதல் மூதாட்டி வரையான பெண்களை அம்பாளாகவே கண்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட அலங்கரிக்க வேண்டும். பலவித பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு தகுந்த உபசரிப்பு செய்து, அவர்களை மகிழ்விக்கிறோம். இதனால், முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.   நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.

அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள்.  ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள்,  திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது  விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் தாத்பரியம்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 10:52 am

மேலே