எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 14 ************************** கருத்து மோதல்கள்...

  அனுபவத்தின் குரல் - 14 
**************************


கருத்து மோதல்கள் , கொள்கை வேறுபாடுகள் , மனமாச்சரியங்கள், நடைமுறை மாறுபாடுகள் இவை அனைத்தும் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறது என்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சாதி மத பிரிவினை மற்றும் அதனால் எழுகின்ற வெறியாட்டம் என்பது மறுக்க முடியாத உண்மை.

மனிதத்தை இழந்து நேயத்தை துறந்து பகுத்தறிவை மறந்து பொதுநலத்தை குழிதோண்டி புதைத்து விட்ட சமுதாயமாக இன்று காணப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. மேலும் வேதனைப்பட வைக்கிறது.

மீண்டும் ஒரு சீர்திருத்தமடைந்த சமுதாயம் மலர்ந்திட, நாம் சாதி மத பிரிவினை மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி , தனிப்பட்ட விரோதம் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து ஒருங்கிணைந்த நெஞ்சங்களாக மாறினால் மட்டுமே எதிர்வரும் காலமும் ஏற்றம் பெற்று சுயநலமற்ற புதிய தலைமுறையும் உருவாகும் .

அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று இது.

பழனி குமார்  

நாள் : 3-Nov-17, 7:03 am

மேலே