எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேன்மை பெற மேலாண்மை சிந்தனை : உடல் வலு...

 மேன்மை பெற மேலாண்மை சிந்தனை : 


உடல் வலு மேம்பாட்டு நிர்வாகம்: மசாஜ்  தெரபி   இயந்திரமாய் வேலை செய்யும் உடம்பை சாந்தப்படுத்திக்கொள்ள நம்மூரில் பலரும்   நாடும் தீர்வுகளில் ஒன்று : மசாஜ் தெரபி.  உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ - சாலைகளில் டிராபிக் நடுவில் நீங்கள் மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும் சமயங்களிலோ அல்லது உங்கள் அலுவகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குள்  சில  இலக்குகளை முடிக்க வேண்டும் என்கின்ற  நெருக்கடிகள்  - இது   போன்ற   தருணங்களில்  நமது  உடம்பு  தேவையில்லாத  சுகாதாரமற்ற  ஹார்மோன்களை  உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை.   கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் - தலைவலி, தூக்கமின்மை மற்றும் அஜீரண கோளாறுகளை உருவாக்க வல்லவை.   இத்தகைய அழற்சி மிகு தருணங்களில் வரப்பிரசாதமாக திகழ்பவைதான் மசாஜ் தெரபிய போன்ற உடம்புக்கு இதமும், அழற்ச்சியிலிருந்து மீள்வு  குணமும் தரும் ட்ரீட்மெண்ட்.  கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அபரிமிதமாக இல்லாமல்  குறைவாக உற்பத்தி செய்வதில்  மசாஜ் தெரபி  பெரும்பங்கு வகிக்கின்றது. இதன் மூலம் ரிலாக்ஸ், ரெஸ்ட், போன்ற ஓய்வு நிலைக்குஉடம்பை அழைத்து செல்கிறது மசாஜ்தெரபி.  மசாஜ் முடிந்த பின்னரும், சில மணி நேரங்கள்  அப்பாடா, அழற்சி குறைவாகிஇருக்கு  என்கின்ற சுகமான உணர்வு, மன மற்றும் உடல்  மூடில் முன்னேற்ற நிலை, இதம் பதம் நிறை ஓய்வு கண்ட  உணர்வு, போன்ற பயன்களை பெறும் சஞ்சீவியாக மசாஜ் தெரபி திகழ்கிறது.   மேலை நாடுகளில் உடல் உரம் பெற வேண்டும் என்கின்ற பேருணர்வு கொண்ட பலர், மசாஜ் என்வி  போன்ற பெயர்களில் உறுப்பினர்கள் குழு கொண்ட கூட்டமைப்புக்களை  செயல் படுத்தி வருகிறார்கள். ஆங்கிலத்தில் WELLNESS  ப்ரோக்ராம் என்கிறார்களே - அத்தகைய திட்டங்கள் மசாஜ் மேலாண்மை பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.  அந்தந்த நபரின் உடல் தன்மைக்கேற்ப உடல் அழுத்த நிலையை சமன் படுத்துவதிலும், வலி உபாதைகளை குறைப்பது/நீக்குவது, எனர்ஜியை மேம்படுத்துவதிலும், ஒட்டு மொத்த  உடல் மற்றும் மன செயல்பாடுகள் மேம்பாடு காண்பதிலும், நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதிலும், மசாஜ் தெரபி கணிசமான பங்கை வகிக்கின்றது.      

பதிவு : KADAYANALLURAN
நாள் : 5-Nov-17, 2:43 pm

மேலே