இந்திய சினிமாவின் பெருமை - பாகுபலி -2 பாகுபலி-2...
இந்திய சினிமாவின் பெருமை - பாகுபலி -2
பாகுபலி-2 படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. திரைப் பிரபலங்களும் பாகுபலிக்கு, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகுபலி-2 இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் சொந்தக் குழந்தையான ராஜமெளலி மற்றும் படக்குழுவினருக்கு எனது சல்யூட்! தலை சிறந்த படைப்பு" எனக் கூறினார்.
இயக்குநர் ஷங்கரும், பாகுபலி-2 படக்குழுவினரை வாழ்த்தினார். இது குறித்து ஷங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தற்போதுதான் பாகுபலி-2 படத்தைப் பார்த்தேன். இது இந்திய சினிமாவின் பெருமை; துணிவான, அழகான, பிரமாண்டமான முயற்சி பிரமிக்க வைக்கிறது. ராஜமெளலி மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆஃப்" எனக்கூறினார்.