எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​​ அனுபவத்தின் குரல் - 30 ------------------------------------- ஒருவரின்...

  ​​
அனுபவத்தின் குரல் - 30 

-------------------------------------


ஒருவரின் வெளிப்படைத்தன்மை என்பது அவரின் பேச்சிலும் செயலிலும் இருத்தல் அவசியம் . சிலர் அதைப்பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசிவிட்டு தனது நிலையில் மாறுபடுவர் . ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது போல . அதற்கு அடிப்படைக் காரணம் சந்தர்ப்பவாதமும் சுயநலமும் தான் . 


பொதுநலத் தொண்டு என்பது தானே தோன்றிடும் ஒரு சுய உணர்வு. அடுத்தவர் கூறி செயல்படுவது என்பது அல்லது மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக இருந்தால் அந்த உணர்வும் உந்துதலும் நிலைக்காது .


ஆனால் மேற்கூறிய இரண்டுமே இன்று அதிகமாக காணப்படுகிறது . அரசியல்வாதிகளிடம் உடனே தெரிந்துவிடுகிறது . தனிப்பட்ட மனிதரிடம் உள்ளதை  நாம் புரிந்து கொள்வதற்கு சிறிது காலமாகிறது . 

மாற்றம் ஒன்றே சமுதாய மாற்றத்திற்கான சிறந்தது . அதற்கு உதவிடும் அடிப்படை வழிகளில் ஒன்று பகுத்தறிவு நிறைந்த சிந்தனை என்பது எனது கருத்து  



பழனி குமார் 

நாள் : 20-Nov-17, 7:32 am

மேலே