எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புட்டபர்த்தி ஸ்ரீ ஸ்ரீ சத்ய பாபா ஸ்ரீ ஸ்ரீ...

                    புட்டபர்த்தி   ஸ்ரீ  ஸ்ரீ  சத்ய  பாபா   ஸ்ரீ ஸ்ரீ பாபா அவர்களது திரு அவதார தினம் நேற்று


 “அனைவரையும்  நேசி , அனைவர்க்கும்  சேவை  ஆற்று” என்கின்ற தாரக  மந்திரத்தை  சிரம் ஏற்றி அன்பு கூறும் நல்லுலகத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பற்பல சேவைகளை சர்வ தேச  அளவிலும் வியாபித்திருக்கும்  பாபா பக்தர்  ஒவ்வொருவரும்   சிறப்பாக செய்து வருகிறார்கள்.

புட்டபர்த்தி ஸ்ரீ சாய் பாபா அவர்கள் தொடங்கிவைத்த இத்தகைய  சேவை அமைப்புக்கள் மூலமாக -  பிறர் படும் துன்பங்களை கண்டு அவர்களுக்கு உதவுதல், ஒழுக்கம்,  நேரம் தவறாமை, பொறுமை காத்தல், போன்ற குணாதிசயங்களை கொண்டு தொண்டு புரியும் பாபாபக்தர்களிடம்  இந்த குவாலிடிஸ்க்ளை கண்டு, அவற்றை பின்பற்ற   பலரும் விரும்புவது இயற்கையே. ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில், அவரது பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக சத்தியநாராயணன் என்ற நாம கரணத்துடன் 1926ஆம் வருடம்  அவதரித்தார்.

மக்களுக்கு அடிப்படை தேவை  சுத்தமான குடிநீர் என உணர்ந்து, அதனை  வழங்கும் திட்டத்தில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மற்றும் வடக்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, இவர் தொடங்கிய சத்யசாய் மைய அறக்கட்டளை வழங்கி உள்ளது.. சத்ய சாய் அமைப்புக்கள் மூலம் இலவச  மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி சிறப்பாக  நடந்து வருகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அவை கூற வந்த உட்கருத்துக்கள் என்னென்ன என்பனவற்றை உணர்ந்துகொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர் சங்கீர்த்தன், ஆன்மீக வாசகர் வட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் மக்கள் போற்ற தகுந்தவகையில் சுமார் 160 நாடுகளில்  நடை பெற்று வருகின்றன.

அருள் மழை வழங்கும் இவரது  பேச்சுக்கள்  ஆங்கில மொழியில்  கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வெளிவந்துள்ளன. சனாதன சாரதி என்கின்ற மாத இதழ்  தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும்  உலக  மொழிகளான  ஜாப்பனீஸ், ரஷ்யம்  கிரீக், ஜேர்மன்   முதலிய பல மொழிகளில் வெளிவருகின்றது.   




 "ஒரே மதம் - அதுவே அன்பு ஒரே மொழி - இதயத்தின் மொழி ஒரே ஜாதி - மனித ஜாதி ஒரே சட்டம்-கர்மவினை சட்டம் ஒரே தெய்வம்-எங்கும் வியாபித் திருப்பவரே அவர்" "கோட்பாடுகளற்ற அரசியலும், நன்னடத் தையற்ற கல்வியறிவும், மனிதாபிமானமற்ற விஞ்ஞானமும், நாணயமற்ற பொருளாதாரமும், பிரயோஜனமற்றது மட்டுமல்ல, அவை ஆபத்தானவையும் கூட" "வாழ்க்கை ஒரு சவால்; அதை எதிர்கொள். வாழ்க்கை ஒரு கனவு; அதை உணர்ந்து கொள். வாழ்க்கை ஒரு . விளையாட்டு ; அதை மகிழ்ச்சியுடன் விளையாடு. வாழ்க்கை அன்புமயமானது; அதை அனுபவி"          

பதிவு : KADAYANALLURAN
நாள் : 24-Nov-17, 3:44 pm

மேலே