எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 34 ---------------------------------- ஒருவரின் வாழ்க்கையில்...

  அனுபவத்தின் குரல் - 34
----------------------------------


ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி என்பதும் நிலையானதல்ல.தோல்வி என்பதும்
நிரந்தரமல்ல. அவரவர் அறிவுத் திறனும் செயல்திறனும் அனுகுமுறையும் இணைந்து தான் தீர்மானிக்க முடியும் வெற்றி தோல்வியை.ஆகவே வெற்றியைக் கண்டவுடன் துள்ளுவதும் தோல்வியை சந்தித்தவுடன் துவண்டு விடுவதும் கூடாது . இரண்டும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை . 

வெற்றி பெறும் போது அடக்கமாக இருப்பதும், தோல்வியை தழுவும் போது தளராமல் பாடமாக ஏற்பதும் தான் சரியானது .காலநிலை மாறுவது போலத்தான் நம்முடைய வாழ்வில் சூழ்நிலைகள் மாறுவதும் . இது இயற்கையாக நடைபெறும் சுழற்சி . இது நான் அனுபவத்தில் கற்றது.

அதேபோல ஒருவரிடம் எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் ஊரும் உறவும் ஆதரவு அளித்தாலும் நண்பர்களின் அரவணைப்பு இருப்பினும் , அவரது உடல்நலம் குன்றாது ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடல்நலத்தில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். குறை என்பது மனதில் மட்டுமல்ல உடலிலும் இல்லாத வண்ணம் நாம் பார்த்து கொள்வதும் முக்கியம். எந்த நிலையிலும் மனம் தளராமல் எதிர்கொள்ளும் வகையில் உள்ளத்தில் வலிமையுடன் கூட உடலில் வலிவும் இருந்தால் தான் மகிழ்ச்சி பொங்க வாழ முடியும் என்பது எனது அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்.

அப்போது தான் முழுமையான வாழ்க்கை வாழ முடியும் என்பதும் நமது எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்பது எனது கருத்து.


பழனி குமார்  

நாள் : 26-Nov-17, 8:08 am

மேலே