எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருவண்ணாமலை..! ===================== ஆண்டுகள்கோடி பழமை வாய்ந்தது அண்ணாமலை.. .........அப்பர்...

திருவண்ணாமலை..!

=====================


ஆண்டுகள்கோடி பழமை வாய்ந்தது அண்ணாமலை..

 .........அப்பர் சுந்தரர் சமபந்தர் வாசகரால் பதிகம்பெற்றது.!

காண்டாமிருகம் போல வடிவமைப்பு கொண்டமலை..

..........கண்டவர் வியக்கும் கலையெழிலுடன் கோபுரவாசல்.!

ஆண்டுதோறும் மாதந்தோறும் நாள்தோறும் தவறாமல்..

..........ஆறுகால பூசையதில் ஆழ்ந்திருப்பான் அருணாச்சலன்.!

வேண்டும் வரம்தர தீபப்பெருவிழவில் தோன்றுமவனே..

..........வள்ளாளராஜனின் மகனானதால் ஓங்கியது அவன்புகழ்.!




அண்ணாமலையானே.! அக்னித் தலத்தின் நாயகனே!..

..........அனுதினமும் உனைப்பாடினால் நினை வகலவிரியும்.!

உண்ணா நோன்பிருந்து உனைக்கிரி வலம்வந்தால்..

..........உற்றநோயும் ஓடிமறையும் உள்ளத்தே ஒளிபுகுமுனை.!

எண்ணாதிருக்கும் எம்மனமும் ஐம்பெரும் பாதகத்தை..

..........ஏற்றதாகி...எத்தேகமும் சிதைவுற்று நரகத்திலுழலும்.!

பண்ணொடு பக்தியுடன் எந்நாளும் உனைநினைத்தே..

..........பணிவிடை செய்யலாகின் முக்திக்கு வழிகிடைக்கும்.!




சித்தரும் முனிவரும் மகான்களும் வாழும்மலையே..

..........சீராக வெழுச்சிதரும் திருவண்ணாமலை என்றாகும்.!

பித்தனென்றே கூறும்சித்தம் தெளிந்தவர் பலருமங்கே..

..........பிறைசூடியவனைக் காணவே தீபமேற்றி வழிபடுவார்.!

சுத்த பெளர்ணமியில் சர்வேஸ்வரனைச் சுற்றிவந்து..

..........சகலமும்பெற நினைத்தாலே முக்திதரும் தலமாகும்.!

அத்தன் சிவபெருமான் மலைமீதில் வீற்றிருந்துதரும்..

..........ஆறாகப் பெருகிவரும் அருளமுதத்தைப் பெறுவீர்.!                     

நாள் : 2-Dec-17, 1:18 pm

மேலே