எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புயலில் சிக்கித் தவிக்கும் 500 க்கும் மேற்பட்ட நமது...

  புயலில் சிக்கித் தவிக்கும் 500 க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் நிலையை பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வருத்தமாக இருக்கிறது. இந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்தும் புயல் பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அறிவுறுத்தப்படாமல் இருந்ததும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதும் மிகவும் அவலமான நிலை.


மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திருப்பது தாமதமான ஒன்று. கண்டிக்கத்தக்கது.அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் எந்த அமைச்சரும் அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசவில்லை. அவர்களின் அழுகுரல் கோரிக்கையை தொலைக்காட்சியில் பார்த்ததும் இதயம் வலிக்கிறது.

சற்று முன் ஒரு தொலைக்காட்சியில் விவாத மேடையில் ஒரு ஆளுங்கட்சியின் ஆதரவாக பேசிய ஒருவர் மீனவர்களின் குடும்பங்களை சில எதிர்க்கட்சி MLA தூண்டுதலால் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று வாய்கூசாமல் பேசுவது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது  இங்கே இன்று தொலைக்காட்சி விவாதங்களில் ஆளுகின்றவர்கள் அவரவர் கட்சிக்கு ஆதரவாக கூக்குரலிடுவது கேலிக்கூத்தாக உள்ளது. வேதனைப்பட வைக்கிறது.


பழனி குமார்  

நாள் : 2-Dec-17, 9:49 pm

மேலே