எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லார்க்கும் வணக்கம் என் பெயர் கோகுல் மரத்தோட முக்கியம்...

                    எல்லார்க்கும் வணக்கம் என் பெயர் கோகுல் மரத்தோட முக்கியம் நாம எல்லார்க்கும் ஆனா அத மரத்த நடுவதிலும் வளர்ப்பதிலும் காட்டுரமனா இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருந்த மரத்த எல்லம் வெட்டி வீடு கட்டினாங்க, இப்ப வீடு இருக்கு மரம் எங்க, மரத்த வெட்டினவங்க எத்தனை மரம் நட்டாங்க, குறைந்த பட்சம் ஒரு கன்னு கூட வைச்சாங்களா அதுவும் சந்தேகம் தான், "வெட்டின மரம் வாசம் தரலாம் ஒருபோதும் சுவாசம் தராது". மரம் வளர்ப்பது அவசியம் என்பதை தாண்டி கட்டயாம செய்ய வேண்டிய நிலைமைக்கு நாம தள்ளப்பட்டு இருக்கோம், யார் சொன்னா இத நாம செய்வேம், நமக்கு பிடிச்சவங்க சொன்னா செய்வோம். நமக்கு எல்லாம் பிடிச்சவங்க நம்ம ஹீரோ ஹீரோயின் தான். அவ்ங்க சொன்னா நிச்சயம் செய்வோம். நாம அதிகமா நேசிக்கற நம்ம குடும்பத்தில ஒருத்தரா இருக்கிற அவங்க கிட்ட ஒரு அன்பு கோரிக்கைய கட்டளையை வைப்போம், இனி நீங்க நடிச்சி தமிழ்நாட்ல திரையிடப் படுற எல்லா படத்தோட ஆரம்பத்திலும், நீங்கலும் உங்களோட படக்குழுவும் சேர்ந்து மரங்களை நட்ட காட்சிய வெளியிடனும். நட்டா மட்டும் போதுமா, அதன் அவசியம் பற்றி குறைந்த பட்சம் ஒரு முப்பது நொடியாவது பேசலாம்.. இத உங்களை உயிருக்கு மேலா நேசிக்கிற உங்களோட ரசிகனா, ரசிகையா, என்னோட, எங்களோட சார்பா கேட்டுக்கிறோம்.. அது மட்டும் இல்லாம இனி தமிழகத்துல திரையிடப்படுற எந்த மொழி படமானாலும், இந்த காட்சி கட்டாயாம இடம் பெற வேண்டும்னு தமிழக அரசு இதற்கு விரைவா சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்னு நாங்க எதிர்பார்த்துக் கொண்டுயிருக்கிறோம்.. "புகை உயிருக்கு ஆபத்துனா சுவாசிக்கிற காற்றே புகையானா" நிலமை என்னவாகும்.இத நிறைவேற்றும் வரைக்கும் நாம கோரிக்கை தொடரும்,, ........................................................................................................................................................................................................      

நாள் : 4-Dec-17, 1:34 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே