எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 41 ------------------------------------- சமீபத்தில் நண்பர்...

  அனுபவத்தின் குரல் - 41
-------------------------------------


சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்பிய காணொளி காட்சியைக் (Watsup Video ) கண்டேன் . அதில் ஒரு வெளிநாட்டு பிரமுகர் ஒருவரின் ( பெயர் தெரியவில்லை ) ​உரையைக் கேட்டேன்.

அவர் பேசியதின் முக்கிய சாராம்சம் ....

" ஒருவர் எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் தன்னம்பிக்கை வேண்டும் . நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும், நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கும் அந்த மனநிலை இருக்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் . அதன் வெற்றியை அல்லது முன்னேற்றத்தை நீண்ட கால அடைப்படையில் கணக்கிட்டுக் கொள்ளுதல் மிக அவசியம் . உதாரணத்திற்கு பத்து வருடம் என்று நினைத்து தொடங்கினால் அது ஐந்து வருடத்திலேயே நிர்ணயித்த இலக்கை அடைய முடியும். சில நேரங்களில் அதன் முன்னரே கூட நாம் வெற்றியடையலாம் . நம்முடன் இருப்பவர்களும் சேர்ந்து உழைத்தால், ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டால், நிச்சயம் எண்ணம் நிறைவேறி வாழ்க்கையில் நாம் ஜெயித்துக் காட்டலாம் . எப்போதும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது . ஒருமுறை நாம் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டால் மீண்டும் அதே நிலை , அந்த அரிய வாய்ப்பு மீண்டும் வராது என்பதை உணர வேண்டும். நமது குறிக்கோளை , எண்ணத்தை , இலக்கை எந்த விதத்திலும் , எந்த நேரத்திலும் தவறவிடுதல் கூடாது . அந்த பாதையிலிருந்து தடம் மாறாமலும் தவறான வழியில் செல்லாமலும்  இருக்க வேண்டும். அப்படி நாம் செயற்பட்டால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது . நமது வெற்றியை எவராலும் தடுக்க முடியாது " என்று அழகாக கூறியிருந்தார் .

உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் எந்த அளவு நடைமுறை சாத்தியமாக அவர் கூறியுள்ளார் என்பது தெளிவாக புரியும் . அதனால்தான் அவர் இந்த அளவுக்கு உயர்ந்து புகழுடன் விளங்குகிறார் என்பதும் தெரிகிறது . 

அனைவரும் சிந்திக்க , செயலாற்ற , முடிவெடுக்கவே இதை உங்களுக்கும் பகிர்கிறேன் .


பழனி குமார்  

நாள் : 4-Dec-17, 4:04 pm

மேலே