எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளுக்கு 23 வயது நடக்கிறது. செவிலியர் படிப்பு முடித்து...

அவளுக்கு 23 வயது நடக்கிறது. செவிலியர் படிப்பு முடித்து இருக்கிறாள். தன் தாயின் கட்டாயத்தில் செவிலியர் படிப்பில் சேர்ந்து படித்தும் முடித்தாள். வேலைக்கு சென்றாள் தன் தாயின் கட்டாயத்தினால். வேலைக்கு சென்று இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடம் வேலை செய்ய தொடங்கிவிட்டால். தற்போது அந்த வேலை அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது ஆனால் அவளின் தாய் அங்கே வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள். தன் தாயிடம் சண்டை போட்டு அங்கேயே வேலையை தொடர்கிறாள். அடுத்த இரண்டு வாரத்துக்குள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை மாறுகிறது. தன் தாயிடம் சொல்கிறாள் தாய் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று வீட்டுக்கு அழைத்து வந்து சித்த மருத்துவத்தில் சிகிச்சை தொடங்குகிறாள். சித்த மருத்துவர் முன்று மாதம் விடுப்பு எடுத்து சிகிச்சை எடுக்க சொல்கிறார். அந்த பெண்ணும் சரி என்று சம்மதிக்கிறாள். மூன்று மாதம் முடிகிறது அவள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறாள். ஆனால் அவளின் தாய் அனுப்பவில்லை. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள். தன் தாயிடம் இருந்து எப்படி வெளிவருவது என்று அவளுக்கு தெரியவில்லை. 18 வயது வரை தான் ஒரு பெண் மைனர் ஆனால் இந்த பெண் 23 வயதாகியும் ஒரு மைனராக உள்ளாள். இவள் நிலைமையில் இருந்து வெளியில் வர என்ன செய்யலாம் என்று நீங்களே ஒரு தீர்ப்பு கூறுங்கள் நண்பர்களே....

பதிவு : vishali
நாள் : 9-Dec-17, 9:34 pm

மேலே