எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 45 --------------------------------------- வாழ்க்கையில் இலட்சியம்...


அனுபவத்தின் குரல் - 45
---------------------------------------


வாழ்க்கையில் இலட்சியம் என்பது நிச்சயம் தேவை .ஆனால் எந்த நிலையிலும் எந்த காரியத்திலும் அலட்சியம் இருக்கக்கூடாது . இது எவருக்கும், எந்த வயதினருக்கும், எந்த காலகட்டத்திலும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதை நினைவில் 
கொள்ளல் வேண்டும் .இளமைப்பருவம் முதலே அவரவர் விருப்பத்திற்கேற்ப , சூழலுக்கேற்ப ஒரு இலட்சியத்தை அடைந்திட அனைவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளவேண்டும் .அதனை நோக்கித்தான் பாதையும் பயணமும் வகுத்திட வேண்டும் . அடிக்கடி மாற்றிக் கொள்ளும் எண்ணம் அறவே நீங்கிட வேண்டும் .இலட்சியம் என்பது இதயத்தின் வேட்கையாக , நெஞ்சின் அடித்தளத்தில் இருந்து தோன்றிட வேண்டும் . அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . நம்மை நாமே அவ்வப்போது சுயபரிசோதனையும் அலசலும் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும் . அதுதான் நம்மை நாமே திருத்திக் கொள்வதற்கும் சரியான தீர்வையும் எட்டிட வழிவகுக்கும் .

இதைப்பற்றி எவரேனும் விளக்கி, குறை நிறைகளை சுட்டிக் காட்டும்போது அதை நாம் அலட்சியம் செய்தல் கூடாது . அவரை எதிரியாகவும் நினைக்கக் கூடாது .வள்ளுவன் வாக்கைப் போல , கூறுவது யார் என்பதைவிட , யார் கூறினாலும் அவர் சொல்வதை கேட்டு கவனித்து அதன் சாராம்சங்களை , உண்மைகளை புரிந்து நமது பணியை மாற்றியமைத்தல் வேண்டும் . சில நிகழ்வுகளில் சில நேரங்களில் நாம் மிகச்சாதாரணமாக நம்முடைய தனிப்பட்ட காரணிகளுக்காக அலட்சியம் செய்வதால் அதன் எதிர்மறை விளைவை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மறந்திடல் கூடாது .

இலட்சியம் வென்றிட உதவிடும் , அலட்சியம் தோல்வியில் முடியும் .

இதுவும் எனது அனுபவத்தின் ஒரு பாடம் .


பழனி குமார்  

நாள் : 9-Dec-17, 10:01 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே