எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுத்தமும் சுகாதாரமும் சுகந்திரம் கொண்ட மானிடா, நீ சுத்தம்...

சுத்தமும் சுகாதாரமும்


சுகந்திரம் கொண்ட மானிடா, நீ சுத்தம் கொள்ள மறந்தாயோ!
அறிவு கொண்ட மானிடா, ஏனோ ஆரோக்கியம் கொள்ள மறந்தாயோ!
போகும் வழியில் குப்பைகளை கொட்டி எச்சில்களை உமிழிந்தாயே!
அது உன் தாயின்(பூமி தாய்) முகம் என்று அறியவில்லையா,
நீ சேர்க்கும் செல்வதை வீட்டில் குமிக்கிறாய் , ஆனால் உன் வீட்டு குப்பையை தெருவில் குமிக்கிறாய் !
உன் உணவு மீதமாகி குப்பையில் சேர்க்கிறது, அது அன்று இரவு சிலருக்கு விருந்துதாகிராது!
வீட்டுக்கு கொரு குப்பை தொட்டி அரசு கொடுக்க, அதில் அரிசி மாவு சேர்த்து வைத்து வண்டு கொறிக்க!
குப்பை கொட்ட இடம் இல்லாமல் ஆத்துல கொட்டுவோம் , அந்த ஆத்துக்குள்ளயே சாமிக்கு திருவிழா நடத்துவோம்!
குப்பை பொறுக்கி தலைவர்கள் விளம்பரம் பண்ணுவாங்க , ஆனா அவுங்க போட்ட குப்பையை  ஆழ் வச்சு அள்ளுவாங்க!
அறிவியல் கண்ட மானிடா, நீ எவ்வளவு பெரிய அறிவிழி என்று புரிந்து கொள்,
உன் அறிவிண்விழிகள் சொல்வதை கேள்,
"சுத்தம் உன் சொத்து, ஆரோக்கியம் உன் ஆயிசு........."



 


பதிவு : Mathi Veera
நாள் : 10-Dec-17, 8:00 pm

மேலே