எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 49 **************************** இரவுப் பகல்...

அனுபவத்தின் குரல்  - 49
****************************


இரவுப் பகல் என்று இயற்கையாக மாறி மாறி வருவதை போல நமது வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிக் கொண்டே இருக்கும். இரண்டுமே நமது மனநிலை வைத்து தான் கூறப்படுகிறது. ஆனாலும் இன்பமும் துன்பமும் என்றும் எவருக்கும் வாழ்க்கையில் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


இன்பம் ஏற்படும் பொழுது ஆனந்தமும் எல்லை மீறிய நிகழ்வாக கொண்டாடுதல் அல்லது அதுபோன்ற நேரங்களில்  அடுத்தவர் பாதிக்கப்படும் அளவிற்கு நடந்து கொள்வது மற்றவர்கள் வருத்தம் கொள்கின்ற வகையில் நாம் கொண்டாடி மகிழ்வது மிகவும் தவறான செயல். 

அந்த மகிழ்ச்சி அளிக்கும் நிலையே எவ்வளவு நேரம் அல்லது நாள் நீடிக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். 


அதேபோல வருத்தம் கொள்கின்ற நிலையில் துன்பம் நிகழ்ந்தால் அதற்காக நாம் அவ்வளவுதான் வாழ்வும் இனி இருப்பதே வீண் என்று முடிவு எடுக்கவும் கூடாது. அதெல்லாம் நிரந்தர முடிவல்ல. நிலை மாறிடும் நிச்சயம். 


வெற்றி தோல்வியை வைத்து நம்ம வாழ்க்கையில் முடிவுகள் எடுக்க கூடாது. எதுவும் நிரந்தரமல்ல நிலையிலாத வாழ்க்கையில். 


எதையும் எதிர்பார்க்காமல் நாம் நமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்திட வேண்டும். நமது மனநிலை எப்போதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். அதனால் மன உறுதியும் நிச்சயம் கூடும். 

அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


பழனி குமார் 

நாள் : 14-Dec-17, 11:07 pm

மேலே