எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருக்குறள் கூறும் நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்...

திருக்குறள் கூறும் நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
[நட்பு செய்வது போன்ற அறிய செயல் வேறில்லை; அதுபோல பாதுகாப்பிற்கு உகந்த செயலும் வேறில்லை ]

அழிவினவை நீக்கி ஆறித் தவின்கன்
அல்லல் உழைப்பதாம் நட்பு
[நண்பனை தீய வழியில் சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழிநடக்கச் செய்து அவனுக்கு தீங்கு வருங்காலத்தில் அந்த தீங்கின் துன்பத்தை பகிர்ந்துகொள்வதே நட்பு]

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
[அணிந்திருக்கும் உடை எப்படி உடலைவிட்டு நழுவும்போது கைகள் உடனடியாகச் சென்று சரி செய்கின்றதோ அதைப்போல நண்பனுக்கு வருகின்ற துன்பத்தை போக்க துடித்து செயல்படுவதே நட்பின் இலக்கணமாகும்]
என்று நட்பின் மேன்மையைப்பற்றி கூறுகிறார். அடுத்ததாக நட்பென்பது எதற்காக என்று வலியுறுத்துகிறார்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தர் பொருட்டு
[நட்பென்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நலவழித் தவறிசெல்லும்போது இடித்துரைத்து திருத்துவதற்காகும்], அடுத்தது உண்மையான நட்பென்பது எவ்வாறு இருக்கவேண்டும் அதை எப்படி ஆராய்ந்து அறிவது என்பதற்கு நமக்கு பல யோசனைகளை வழங்குகிறார் அவற்றில் சில:

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம்தரும்.
[ திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்ப்படுத்திகொள்கின்ற நட்பு கடைசியில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகின்ற அளவிற்கு துயரத்தை உண்டாக்கிவிடும்] தீய நட்பு என்பது எப்படி இருக்கும் என்று நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்:

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
[தீமை வந்தாலும் அதிலும் ஓர் நன்மை உண்டு, அந்த தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டுகிறது]

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
[நல்ல பண்பு இல்லாதவர்களின் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பது போல தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக்கொள்வதே மேன்மை]

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
[பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்பு கொள்பவரும், விலைமாதரும், கள்வரும் ஆகிய இம்மூவரும் ஒரே மாதிரியானர்வகளே]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப்படும்
[சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிடவேண்டும்]

இவ்வாரெல்லாம் நட்பினை பற்றி நமக்கு விளக்கமளித்துவிட்டு கடைசியாக அப்படியே தவறி அறியாமல் தவறான நண்பரை தேர்வு செய்துவிட்டோம் என்றால் நமக்கு அதிலிருந்து விடுபடவும் வழிகளை காட்டுகிறார்.

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீ விடல்
[பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் நட்புச் செய்து பின்னர் அதையும் விட்டுவிட வேண்டும்]

மிகச்செய்து தாமெள்ளுவாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
[வெளித் தோற்றத்திற்கு நகை முகம் காட்டி மகிழ்ந்து உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை நலிவடைய செய்திட நாமும் அதே முறையை கடைபிடிக்க வேண்டும்]

பதிவு : ராஜ்குமார்
நாள் : 9-Feb-18, 11:09 am

மேலே