எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிப்ரவரி 10, சனிக்கிழமை மேன்மை பெற மேலாண்மை செய்தி:...

பிப்ரவரி 10,


சனிக்கிழமை

மேன்மை பெற மேலாண்மை செய்தி:  

" எனக்கு தொழில் பிரச்னை, பிரச்னை தான்" என்று திளைப்பவர்கள் பலர் நம்மில். இல்லையா? பிரச்னையை கவலையாக நினைத்து ஏங்கும் எண்ணம்  நம்மிடம் படர்ந்தால்,அக்காரியம் ஒன்று ஒத்திப் போடப் படலாம் அல்லது குறிப்பிடப்பட்ட அவ்வேலைக்கு  மூடு விழா நடத்தும் படலம் நடக்கலாம். ஆக்கமிகு செயல் ஊக்கத்துடன் நிறைவு பெற வழி என்ன ?.  பணிக்கப்பட்ட பணியை -  அது சற்றே கூடுதலாக சிரமம் கொடுக்க வல்லதாக எண்ணினாலும் அந்த எதிர்மறை எண்ணத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அச்செயலை   உடனுக்குடன் முடிக்கும் சுறுசுறுப்பு இருந்துவிட்டால் அனைவருக்கும் சௌக்கியமே.   

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று: தனக்கு வேலைப்பளு ஏற்கனேவே அதிகம் என்று தாங்கமுடியாத வருத்தத்தில் இருந்த கப்பற்படை உயர் அதிகாரி ஒருவரிடம் மற்றோர் பொறுப்பு சுமத்தப்பட்டது. ஏற்கனவே உதவியாளர் இன்றி பணியாற்றிக்கொண்டிருந்த அவர் கேப்டனிடம்  சென்று தனக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்னை  என்று பொரிந்து தள்ளினார். 

பொறுமையின் சிகரமான கப்பலின் வயதான கேப்டன் அமைதியாக: "பிரச்னைனா என்னென்று உனக்கு தெரியுமா? டெக்னீக்கல்  ஆன   வேலை செய்யும்போது  மூட்டு எலும்பு முறிந்து போய் படுத்து, குணமாக சில வருடங்கள்  ஆகும் என்றால்  அது பிரச்சினை. தீயில் வீடு சாம்பல் ஆகி, அனைத்தையும்  இழந்து  நிர்கதியாய்  நின்றால் அது பிரச்சினை. அதாவது பல மாதங்கள் / வருடங்கள்  முயன்று சரி செய்தால் தான் உண்டு என்கின்ற களம்  இருக்கே :  அந்த வகையில் வருவதுதான்  பிரச்சினை.  ஆனால் பிரச்சினை என்ற பெயரில் வழக்கத்தில் கூறுகின்ற  எல்லாமே அசௌகரியங்களே. இதுபோன்ற அசௌகரியங்கள் வரும், போகும், பெரிதாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இவை சில நாட்களில் சமாளிக்கக்கூடியவை.இறுதியில், மறக்கப்படக்கூடியவை." என்றார்.  

“பிரச்னை என்று நினைப்பவர்கள் பிறரது கவனத்தை  ஈர்ப்பதற்காக, அரவணைப்பிற்காக, ஒருவகையான பாது காப்புக்காக ஏங்குபவர்கள்" என்கின்றனர் மனோ தத்துவவியல் வல்லுநர்கள்.  பாடமும், தேர்வும் கஷ்டம் என நினைக்கும் மெடிக்கல் ஸ்டுடென்ட்க்கு  புத்தகங்களில் தான் படிக்கும் எல்லா வியாதியும் தனக்கு இருப்பதாகவே என்ன ஓட்டங்கள் உருவாகலாம் இல்லையா. அது அவனது அசௌகரியமான அணுகுமுறை. "ஐயோ, அன்று ஆத்திரப்பட்டோமே" என்று பின்னாளில் நாமே நமது உணர்ச்சிகளுக்கு மன்னிப்பு கேட்டு,வெட்கப்படும் அளவுக்கு சிறிய விஷயமாய் தெரியும்.  இவை போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இவற்றிற்கு  பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நாம்  என்றுமே மகிழ்ச்சி கடலில் திளைக்க முடியாது.   

இப்போது கூறுங்கள்: நாம் சந்திக்கும் சில பிரச்னைகள் உண்மையில் பிரச்னைகள்தானா  அல்லது இப்போதைய அசௌகரியமா என்று ப்ரஷ்னக்  (கேள்வி) கணை  எழுப்பிப் பாருங்கள். அசௌகரியங்கள் பல சௌகரியமான முடிவுகளை நமக்கு பல சந்தர்ப்பங்களில் ஈட்டி தந்திருப்பது சௌக்யமான சங்கதிதானே !!!         

கடையநல்லூரான்

பதிவு : KADAYANALLURAN
நாள் : 10-Feb-18, 9:44 pm

மேலே