எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் வளர்த்த சான்றோர் : தமிழகத்து நேரு மாமா...



தமிழ் வளர்த்த சான்றோர் :


தமிழகத்து நேரு மாமா : குழந்தை கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்கள்: 

திரு ப. சிதம்பரம் அவர்கள்  மத்திய நிதி அமைச்சர் ஆக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது "ஒரு கேஸ் பற்றிய விளக்கங்களை  சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்  அவர்களுக்கு   அழகாக  தெளிவாக அளிக்கலாம். ஆனால், குழந்தைகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவ்வளவு எளிதல்ல". 

உண்மைதானே. குழந்தைகளின்  கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான விஷயம் அல்ல.  குழந்தைகளின் என்ன ஓட்டங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் கவிதை புனைவது பேரறிய செயல். குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். 

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். அதுவும் சாகா வரம்  பெற்ற கவிதைகளை குழந்தைகள் நெஞ்சில் தெளித்த பெருமை இவருக்கு என்றென்றும் உண்டு.   குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்  என்பார்கள்.  குழந்தைகள் உலகம்தான் அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். இக்கருத்துக்கு பிறிதொரு கருத்து இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அத்தகைய அன்பு நிறைந்த u நிறைந்த பூந்தோட்டத்தில், வண்டாகச் சுற்றிவந்து, தேன் கவிதைகளைக் குழந்தைகளுக்கு அளித்தவர் அழ.  வள்ளியப்பா. அதுவும் இன்று பல குழந்தைகள் செல்பேசியும், தொலைக்காட்சியும் கதி என்றிருக்கும் கால கட்டத்தில், அழ வள்ளியப்பா அவர்களை  நினைவுகூர்வது முக்கியம். 

புதுக்கோட்டை மாவட்டம்  ராயவரம்  என்கின்ற  ஊரை சொந்த ஊராகக் கொண்ட இவர்,  சிறு வயதில் பள்ளிக்கு செல்லுங்கால் தமது ஊரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து.சென்றுதான் கல்வி கற்றுவந்தார். பள்ளிக்குப் போகும் வழியெல்லாம் பறந்து திரிந்த பறவைகளோடு பாடிப் பரவசம் அடைந்தவர்.  சிறிய வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவசப்பெற்றார் இவர். ..    

"வட்டமான தட்டு" பாடலின் மூலம் லட்டின் இனிப்பும் தங்கையின் அன்பையும் அழகாக ஊட்டி விடுகிறார். கணக்கியல் மற்றும் குடும்ப ஒற்றுமை பற்றிய பல்வேறு வாழ்வியல் முன்னேற்ற குறிப்புக்களை நாம் அறியாமலே உள்ளடக்கி விடுகிறது இக்கவிதை - இல்லையா? !!   "அணிலே, அணிலே ஓடி வா, அழகிய  அணிலே, ஓடி வா" பாடல் முலம், அணிலை நண்பனாகப் பாவிக்கும் லாவகத்தை நமக்கு அல்வா போல மிக மிருதுவாக ஊட்டுகிறார். எளிமையான நடை, ஏற்றமிகு கருத்துக்கள், பல நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவிதைகளுக்கு ஜீவனும், ஊக்கம் கொடுக்கக்கூடிய திறனும் உண்டு என்கின்ற கருத்தினை நமக்கு  வழங்கியது  கவிஞருக்கு மட்டுமே சாத்தியமானது.

இலக்கிய வட்டத்தை பொறுத்த வரை, இவர்,  சக்தியில் எழுத ஆரம்பித்ர்தார். , இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள்.பின்னர்,  இந்தியன் வங்கியில் பணிபுரியும் வாய்ப்பு, அதனூடே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிக் குவித்தார். வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், பூஞ்சோலை, கோகுலம் இதழ்களுக்கு ஆசிரியப்பணியை மேற்கொண்டார்.


கடையநல்லூரான் 

பதிவு : KADAYANALLURAN
நாள் : 10-Feb-18, 9:49 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே