எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐவகை நிலங்கள் தமிழர்கள் அக்காலத்தில் பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர்....

ஐவகை நிலங்கள்

தமிழர்கள் அக்காலத்தில் பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர். குடியிருக்கும் நிலப்பகுதியை ஐந்து வகைகளாப் பிரித்தனர். அவை என்னென்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

குறிஞ்சி

மலையையும் மலைசார்ந்த இடத்தையும் தமிழர்கள் குறிஞ்சி என அழைத்தனர். அங்கு வாழ்ந்தவர்கள் 'குறவர்' என்ற பெயருடன் வலம் வந்தனர். கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல் முதலிய தொழில்களைக் குறவர்கள் செய்து வந்தனர். தினை, மலை நெல் ஆகியவற்றை உட்கொண்டு அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

மருதம்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். அந்நிலத்தில் வாழ்ந்தவர்கள் உழவர்கள் என அழைக்கப்பட்டனர். களை பறித்தல், நெல்லரிதல் ஆகியவை அவர்களின் வேலையாகத் திகழ்ந்தது. வெண்னெல், செந்நெல் ஆகியவை அவர்களின் உணவாக இருந்தது.

நெய்தல்

கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல். அங்கு வாழ்ந்தவர்கள் 'பரதன்' என அறியப்பட்டனர். உப்பு விளைவித்தல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நம்பி அவர்களின் வாழ்வாதரம் இருந்தது. மீன், உப்பு முதலியவற்றை அவர்கள் விற்பனை செய்தனர். அதன்மூலம் கிடைத்த பொருள்தான் அவர்களின் உணவு.

முல்லை

காடும், காடு சார்ந்த இடமும் முல்லை. அங்கு குடியிருந்த மக்கள் 'ஆயர்' என அடையாளப்படுத்தப்பட்டனர். நிரை மேய்த்தல், ஏறுதழுவுதல் ஆகியவை அவர்களின் பணியாகத் திகழ்ந்தது. சாமை, வரகு ஆகியவை அவர்களின் உணவாகும்.

பாலை

மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை என வகைப்படுத்தப்பட்டது. அங்கு வசித்தோர் 'எயினர்' என அழைக்கப்பட்டனர். பாலை நிலத்தில் விவசாயம் செய்ய வழி இல்லாததால் அங்கு இருந்தவர்கள் வழிப்பறியைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். களவாடும் பொருளை வைத்து தங்கள் பசியைப் போக்கிக்கொண்டனர்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 22-Feb-18, 12:29 pm

மேலே