எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நண்பரின் மரணம்... ஏற்க முடியவில்லை.... முடியவில்லை...! என்னால்...

என் நண்பரின் மரணம்...
ஏற்க முடியவில்லை....

முடியவில்லை...! என்னால் முடியவில்லை...!!
முயன்றேன்...! தோற்றேன்..! முடியவில்லை...!
உன் மரணம்! நம்பவே முடியவில்லை..!
உண்மையில்... உன் வாழ்கை முடியவில்லை!!

கண்ணீரை நிருத்தவும் முடியவில்லை! –என்
கண்களை துடைக்கும் கரம் காணவில்லை.
காத்திருந்தேன்... நீ எனை அழைக்கவில்லை...
கடைசியில் உனை காணவும் முடியவில்லை!

கண்முன்னே நிற்க்கின்றாய்!. மறையவில்லை!!... என்
கவலைகள் போக்கினாய் மறக்கவில்லை!
கடிந்து நீ பேசிநான் கேட்டதில்லை!
காலமெல்லாம் நெஞ்சமுன்னை மறப்பதில்லை!....

விட்டுச் சென்றாய் வேலையில்! தவறில்லை!
விலகிச்சென்றாய்.. வின்னிற்க்கு! மணம் விரும்பவில்லை!!
அன்பினில்! உனை மிஞ்ச முடியவில்லை!... உன்போல்
ஆதரவாய் எனக்கிங்கு எவருமில்லை!

நாள் : 27-Feb-18, 12:29 pm

மேலே