எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா சாலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை...

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா

சாலை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விட சுதந்திரம் அடைந்த பிறகே நம் நாட்டில் சாலை வசதி பல மடங்கு அதிகரித்தது.

சுதந்திரத்திற்கு முன் வெறும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் மட்டுமே இருந்த இந்தியாவில், இப்போது 30 லட்சம் கி.மீ. நீளத்துக்கு சாலைகள் இருக்கின்றன! அதாவது, சுதந்திரத்துக்குப் பிறகு சாலை வசதிகள் மட்டும் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ஏழாவது இடம்


நம்நாடு சுதந்திரம் பெற்றபோது நாட்டின் மொத்த ரயில்வே இருப்புப்பாதையின் நீளம் 53 ஆயிரம் கிலோ மீட்டர். சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 63 ஆயிரத்து 140 கிலோ மீட்டர் நீளம்.

அதாவது, சுதந்திரம் அடைந்த பிறகு நம் நாட்டில் உருவாக்கப்பட்ட இருப்புப் பாதைகளின் மொத்த நீளம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் மட்டுமே. என்றாலும், உலகிலேயே நீண்ட ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

விமான நிலையங்கள்

சுதந்திரத்துக்குப் பின் கொல்கத்தா, மும்பை, டில்லி, சென்னை விமான நிலையங்கள் மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக இருந்தன. ஆனால், இப்போது நிலமை மாறிவிட்டது.

20 சர்வதேச விமான நிலையங்கள் இந்தியாவில் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மட்டும் பெங்களுரூ, சென்னை, ஹைதராபாத், கொச்சின், திருவனந்தபுரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன. திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களும் இந்த பட்டியலில் இடம் பெற உள்ளன.

அதேநேரம், இந்தியாவிலுள்ள உள்நாட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 123. இவற்றில் விமானப் படை தளங்களும் அடங்கும்.

துறைமுகம்

இந்தியாவின் அரபிக்கடலில் குஜராத் மாநிலத்திலிருந்து, கிழக்கே வங்காள விரிகுடாவில் மேற்கு வங்கம் வரை இந்திய கடல் பரப்பு விரிந்துள்ளது.

கடல் பரப்பின் மொத்த நீளம் 7 ஆயிரத்து 517 கி.மீ. கடல் பரப்பளவுக்கு தகுந்தால் போல் துறைமுகங்களும் நம் நாட்டில் உள்ளன. இந்தியாவில் இப்போதுள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை 38.

தமிழகத்தில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர 187 சிறு துறைமுகங்களும், சரக்குகளை கையாளும் 43 துறைமுகங்களும், 23 மீன்பிடித் துறைமுகங்களும், கடலோரப் பகுதிகளில் 93 மீன்பிடி மையங்களும் இந்தியாவில் உள்ளன.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 28-Feb-18, 6:21 pm

மேலே