எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலை கசக்காதீர்கள்... காகிதத்தை நேசிக்கவும், பூவுடன் பேசவும், தனிமையில்...

காதலை கசக்காதீர்கள்...




காகிதத்தை நேசிக்கவும்,

பூவுடன் பேசவும்,

தனிமையில் சிரிக்கவும்,

இதயதுடிப்புகளை இசையாக்கவும்,

அழுக்கை அழகாக்கவும்,

நீரை நெருப்பாக்கவும்,

நெருப்பை பனியாக்கவும்,

இறப்பை நேசிக்கவும்,

விழிநீரை கடலாக்கவும்,

இமைகொண்டு உலகை மூடவும்,

பெண்மையை ரசிக்கவும்,

நிழலை நிஜமாக்கவும்,

ஒற்றையடி பாதையை ஓராயிரமாக்கவும்,

ஓராயிரம்பாதையை ஒற்றையடியாக்கவும்,

இருளுக்கு ஒளியூட்டவும்,

கதிரவனை நிலவாக்கவும்,

அவள் பெயரை வேதமாக்கவும்,

காமத்தை துளியாக்கவும்,

அன்பை கடலாக்கவும்,

இதயத்தை இடிக்கவும்,

உள்ளத்தை உருக்கவும்,

இன்னும் ஆயிரம்

மாயங்களை உருவாக்க...

இந்த உலகத்தை மாற்ற...

காதல் ஒன்றே ஒரு மந்திர சொல்...

அதை கசக்கி விடாதீர்கள்...

காதல் என்ற பெயரில் உங்கள் வேசத்தை அதில் இட்டு...

✍🏻 நெய்தல் தமிழன்
  • த.இருதயா

பதிவு : த இருதயா
நாள் : 11-Mar-18, 11:35 am

மேலே