எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​​​அனுபவத்தின் குரல் - 99 -----------------------------​----------​ நம் நாடு...

  ​​​அனுபவத்தின் குரல் - 99 
-----------------------------​----------​


நம் நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகிறது ,ஆனாலும் இன்றும் நாடெங்கும் சாதி மதக் கலவரங்கள் , ஆவேசபேச்சுக்கள் , அடக்குமுறை எழும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்கள் , அவற்றின் எதிரொலியாக நடக்கும் வன்முறைகள் , ஆணவக் கொலைகள் , பழிவாங்கும் படலங்கள் , குடும்பங்களில் உருவாகும் பிரிவினை காட்சிகள் , இவையன்றி இதன் தொடர்பாக , சிலரால் தொடரப்பட்டு நிலுவையில் ஊசலாடும் வழக்குகள் ,தீர்வே காணப்படாத பிரச்சினைகள் ​மற்றும் முடிவே எட்டப்படாத குழப்பங்கள் நிறைந்த சூழல்கள் நிலவுவதை எவராலும் மறுக்க முடியாது . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் ,ஆங்கிலேய ஆட்சி தொடங்கி நீதிக் கட்சி ஆட்சி தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடந்து முடிந்து , பின்பு திராவிட ஆட்சியும் மலர்ந்து, வேரூன்றி வளர்ந்து அதன் நீட்சியே இன்றுவரை அதிகாரத்தில் இருந்தும் எந்தவித மாற்றமும் , குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் அடையாமல் நீடிப்பது மிகவும் வேதனைக்குரியது . சமுதாயத்தில் பெருமைப்படக்கூடிய ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் , புரட்சிகரமான திட்டங்கள் அமுலுக்கு வந்தாலும் நடைமுறையில் சிக்கல் இருந்தும் தொய்வின்றி தொடர்வதும் இருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் . அதற்கு வித்திட்டவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் என்பதையும் மறக்க முடியாது . அதே போன்று கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் மறக்க முடியாது .​


ஆனால் இன்றைய சூழ்நிலை , அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிறது ...முன்னேற்றம் என்ற நிலைமாறி பின்னடைவு என்பதே உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது . அதற்கு அரசியல் சூழலும் , சமுதாயத்தில் நிலவும் ஒற்றுமையின்மையும் , சாதிமத வெறியாட்டமும் , ​ஓங்கிடும் பொறாமையும் பொல்லாமையும் ஒருபக்கம் எனில் , அநீதிகளும் , நேர்மையின்மையும் , வளரும் குற்றங்களும் , பழிவாங்கும் எண்ணமும் , பணப்பித்தும் , பதவி வெறியும் மறுபக்கம் பரவி கிடப்பதும் காரணமாகிறது . மக்களின் மனதில் பொதுநலம் குறைந்து சுயநலமே நிறைகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையின் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அமைதியும் அறவே இருக்காது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் . என் வயதில் இருப்பவர்கள் கடந்த தலைமுறையை கண்டு களித்தவர்கள் ....இன்றைய தலைமுறை வாழ்வை கண்டு ஏங்குபவர்கள் . அடுத்த தலைமுறை வாழ்வை நினைத்து வருந்துபவர்களாகத்தான் இருக்க முடியும்.


வளரும் தலைமுறையினர் எதிர்காலத்தைப் பற்றியும் , நாட்டின் நலனைப் பற்றியும் சிந்திக்கும் எண்ணமே இல்லை . இது அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது . இன்று இன்பம் காண நினைப்பவர்கள் , நாளை அதே நிலை நீடிக்கவும் மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை . மாறாக ஒருவரையொருவர் குற்றம் கூறுவதும் குறை காண்பதும் மட்டுமே அதிகரித்துக் கொண்டே உள்ளது . இந்நிலை வளமான வருங்காலத்திற்கு வழிவகுக்காது . ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளம் அமையாது . நான் அடிக்கடி வளரும் தலைமுறை பற்றி கவலைப்படுவதும் , இளைய சமுதாயத்திற்கு அறிவுரை ஆலோசனை கூறுவதற்கும் அடிப்படை நோக்கம் இனி வரும் காலம் நல்ல்லமுறையில் அமைவதும் அது மகிழ்ச்சியும் உற்சாகமும் வளமும் நிறைந்து இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதால் . பல்லாண்டு காலம் வாழ்வோம் என்பதைவிட வாழும்வரை இன்பமுடன் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் குறிக்கோளாக இருந்திடல் வேண்டும் என்பதே முக்கியமான ஒன்றாகும் . வாழ்ந்து முடிந்தவர்களை விட வாழப் போகிறவர்களை நினைத்து கவலைப்படுபவர்களில் நானும் ஒருவன் . வாழ்த்துக்கள் .


பழனி குமார்  

நாள் : 22-Mar-18, 6:11 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே