நான் கண் விழித்த நாளில் இருந்து,,, காணுகின்ற தெய்வம்...
நான் கண் விழித்த நாளில் இருந்து,,, காணுகின்ற தெய்வம் நீ,,, கை கூப்பி வாணங்கியதும் இல்லை,, ஆனால் உன் உயிர் அருள் இன்றி நான் வாழ்த்திடவும் இல்லை,,, பட்டினிக் கிடக்கும் என் சட்டை பாக்கெட்....! அஞ்சரப்பெட்டிக்குள் இருந்து நீ எடுத்து தரும் ஐந்து ருபாய் நோட்டுக்காக,,,.! நீ சமைத்த உணவுவை நான் முதல் வாய் வைக்கும் வேளையில் என் முகம் பார்ப்பாயே...சப் என்று இருக்கும் உணவு கூட சக்கரையாக இருக்கும்..! கோபத்தில் திட்டினாலும்...! கொஞ்சி பேசினாலும்...! உன் அருகில் நான் குழந்தை தான்... வலி எடுக்கும் போது உன் பெயரையே வேண்டுகிறேன்........! அடுத்த ஜென்மத்தில் நீ பிறக்கும் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்....!