எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறந்த மக்கள் தொடர்பாளர் நாரதர் நீதி போதனை வகுப்புக்கள்...

சிறந்த மக்கள் தொடர்பாளர் நாரதர் 



 நீதி போதனை வகுப்புக்கள் என்று பிரத்யேகமாக எத்தனை கல்வி சாலைகளில் நடத்தப்படுகின்றன என்பதை விரல் விட்டு எண்ணப்படும்   அளவிற்கு குறைந்தும் விட்டன, ஆர்வலர்களும் மெத்தனமாகவே உள்ளனர். பற்பல நீதிக்கதைகள் மூலம் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கிய நாம் இன்று அடையாளம் இழந்து நிற்கிறோம்.

ஆனால் நீதி கதைகள் மூலம் சிறந்த பண்புகளை உள்வாங்கி மக்கள் உத்தமர்களாக விளங்க வேண்டும் என்கின்ற தன்னலம் அற்ற முயற்சியில் நாரதர் பெரு வெற்றி கண்டார். வால்மீகி ரிஷி மூலமாக அரிய காப்பியமான ஸ்ரீ ராமாயணத்தை கிடைக்க செய்தவர் நாரதர் என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.  கிருஷ்ண பகவானையே சந்தித்து கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனது இளைய பிராயத்து லீலைகள் என்னென்னவாக இருக்கவேண்டும் என்று விவாதித்த மக்கள் தொடர்பாளர் அவர் . வ்யாஸ ரிஷியை சந்தித்து  ஸ்ரீமத் பாகவதம் எழுத தூண்டினார். எந்த இல்லத்தில் பாகவதம் உள்ளதோ அங்கு அனைத்து க்ஷேமங்களும் உண்டாகும் என்பது ஐதீகம். 

இறைவன், மனிதர்கள், அசுரர்கள், தேவ மஹா புருஷர்கள் என்று எல்லா தரப்பினரையும்   அணுகி, தகவல் பல திரட்டி, சமூக சேவை செய்வது நாரதருக்கு கைவந்த காலை. இன்று செய்தியாளர்கள் பலரும் குறிப்பிட்ட சுப்ஜெக்ட்டில் மட்டுமே வித்தக தன்மை பெற்றிக்கின்றனர்.  ஆனால், நாரதர் என்கின்ற செய்தியாளர் தெரிந்து வைத்திருந்த கலைகள் என்னென்ன தெரியுமா ? கணிதம், ஆன்மிகம், நல்லொழுக்கம், அரசியல், ஜோதிட சாஸ்திரம், மருத்துவம், புராணம், தர்க்கம், நடனம், சங்கீதம், பிரபஞ்ச இயல்பு முறை, இலக்கணம் என்று அவர் தெரிந்து வைத்திருந்த பட்டியல் நீ..........ளும். தவிர மென்மேலும் கற்றறிய வேண்டும் என்கின்ற தாகமும், உந்துதலும் எத்தகைய செய்தியாளருக்கும் தேவை. அத்தகைய தேடுதல், திரட்டல், மெருகேற்றுதல் போன்ற தாக்கங்களை நாரதர் கொண்டிருந்தார். 

தன்னிடம் கொண்டிருந்த அளப்பரிய திறமைகளைகொண்டு, தமக்கான வசதிகள் என்று அவர் ஏற்படுத்திக்கொண்டதே இல்லை.  அனைத்தும் உலக நன்மைக்கே என்று திகழ்ந்தவர். 

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல,  கண்ண பரமாத்மா தனது பகவத் கீதையில் முக்கியமாக பதிவு செய்திருக்கும் வாசகங்களில் ஒன்று என்ன தெரியுமா : "தேவா ரிஷிகளில் நான் நாரதர்" என்று. 

இப்பொழுது புரிந்திருக்குமே, நாரதர் ஒரு லட்சிய மக்கள் தொடர்பாளர், செய்தியாளர் மற்றும் பன்முகங்கள் கொண்ட மகா புருஷர்  என்று. 

இன்று நாரத ஜெயந்தி. 

.... கடையநல்லூரான்

பதிவு : KADAYANALLURAN
நாள் : 1-May-18, 11:00 am

மேலே