எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமதி ம்ருநாளினி சாராபாய் அவர்களின்1௦௦ வது பிறந்த தின...

திருமதி ம்ருநாளினி சாராபாய் அவர்களின்1௦௦ வது பிறந்த தின விழா :   


திருமதி  ம்ருநாளினி சாராபாய் அவர்களின்1௦௦ வது பிறந்த தின விழா நேற்று என்பது பலருக்கும்  தெரிந்திருக்கலாம். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பல  ஆடல் கலைகளில் பாரதநாட்டியம் மற்றும் கதகளி என்ற இரண்டு பெரும்  கலைகளில் புலமை பெற்றிருந்த அவர்  சுமார் 3௦௦ ஆடல் நாடகங்களுக்கு கோரியோக்ராபி, பற்பல நாவல்கள், சிறார்களுக்கான கவிதைகள், என்று பன்முகம் கொண்ட படைப்பாளியாகவும் திழ்ந்துள்ளார்.

ம்ருநாளினி சாராபாய் அவர்கள் மேற்கொண்ட  இதர பெருமை மிகு படைப்புக்கள்:

ü  தர்பனா அகாடெமியை நிறுவியவரும் இவரே 

ü  ஸ்விட்சர்லாந்தில் இளம் பிராயத்தில் மேற்கத்திய ஆடல் கலையை கற்றது

ü  மற்றோரு ஆடல் காலை வல்லுனரான  மல்லிகா அவர்கள் இவரது மகள்   

  இந்தியா வானியலில் தந்தை என்று கருதப்படும் திரு விக்ரம் சாராபாய் அவர்கள் இவரது கணவர். 

 ü  பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி பெலோஷிப் போன்ற உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.   

ம்ருநாளினி அவர்கள் தமது 97வது  வயதில் நம்மை விட்டு பிரிந்தார் (2016)  இவரது புகழ் மகுடத்திற்கு மாணிக்க பதிவு  வைத்தாற்போல், கூகிள் அமைப்பு, தமது கூகிள் டூடுள் வெப்சைட் பக்கத்தில், சுதீப்தி  டக்கர்  அவர்களால் உருவாக்கப்பட்ட அனிமேஷன் பதிவை தமது பார்வையாளர்கள் கண்டு கழிக்கும் வண்ணம் நேற்று உலவவிட்டுள்ளது.ம்ருநாளினி  அவர்கள்து மாணவிகள் மகிழ்வுடன்   அவர் உருவாக்கிய அகாடெமியில் ஆட, அந்த நிகழ்வை  ம்ருநாளினி அவர்கள் பெருமையுடன் கண்டு களிப்பது  போன்றதொரு அனிமேஷன் பதிவுதான் அது  

ஆடல் மற்றும் இலக்கிய உலகுக்கு, அவர் ஆற்றிய பணிக்கு உரிய வகையில் அஞ்சலி செய்த கூகிள் அமைப்புக்கு நன்றி.  எனது இந்த பதிவை பார்வையிடும் எழுத்து எண்ணம் நேயர்களுக்கு ஏகாந்தம் நிறை இந்த தருணத்தில்,  ஆடல், பாடல் கலந்த இலக்கிய பூர்வ நன்றிகள்.    : :: ::கடையநல்லூரான்      

பதிவு : KADAYANALLURAN
நாள் : 12-May-18, 10:13 am

மேலே