எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்டோக்ஹோல்ம் நகருக்கருகே இயற்கையை நேசிக்கவல்ல ஷாப்பிங் மால் ஆம்....

ஸ்டோக்ஹோல்ம் நகருக்கருகே இயற்கையை நேசிக்கவல்ல  ஷாப்பிங் மால் 


ஆம்.  ஸ்டாக்ஹோம்  நகரிலிருந்து  100கிலோமீட்டர் தூரத்தில்  எஸ்கில்ஸ்துனா என்கின்ற இடத்தில,   இத்தகைய மால் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

மாசு படும் நவீன பொருட்களின் அலங்காரங்கள் கிடையாது, மண்ணை - சுற்றுச்  சூழலை கெடுக்கும் பொருட்களின் விற்பனை கிடையாது. உங்கள் இல்லங்களில் குப்பை என கருதப்படும் பழைய சைக்கிள், இயந்திரங்கள் போன்றவற்றை அங்கே கொடுத்து விடுங்கள்.  மால் வளாகத்துக்குள்ளேயே அப்பொருட்களை  மறு சுழற்சி செய்யும் வண்ணம் பட்டறைகள் உள்ளன. அங்கே அவற்றை பயன்படுத்தி மறு சுழற்சி செய்து  புதிது புதிதாக  பொம்மை முதல் பல பொருட்களை வியாபாரம் செய்கின்றனர் - செம்மையான வரவேற்பு. இதுவரை சுமார் ஐம்பது பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் மக்கள் இந்த மாலிற்கு பொருட்களை வாங்க விஜயம் செய்த வண்ணம் உள்ளனர்.  

வளாகம் உள்ளேயே, மறு சுழற்சி எப்படி செய்வது, இயற்கை வளங்களை அழியாமல் காப்பது போன்ற விளக்கங்கள் கொடுக்கவல்ல பயிற்சி கல்லூரி,கானபெரென்ஸ் அறைகள், சிற்றுண்டி விடுதிகள் என்று இயற்கை நண்பன் வடிவத்தில் (ecofriendly)வித்தியாசமான மால்.  மண்ணுக்கும், விண்ணுக்கும் ஊரு விளைவிக்கும் செயற்கையான சாதனங்களின் வியாபாரத்துக்கு  "இல்லை, , ,வேண்டாமே "சொல்லும்  இயற்கை நண்பேன்டா வளாகம்.  

நார்வே, ஸ்வீடன் மக்கள் இயற்கையை நேசிக்கும் யுக்திகளை கையாள முனைந்துள்ளது வரவேற்கத்தக்க சங்கதி.  

இயற்கை சூழ் மலைகள், நதிகள், கானகங்கள், போன்றவற்றை இயற்கையாகவே சொந்தமாக கொண்டிருக்கும் நாம், இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை வாங்குவதை, பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி, செயற்கையான வாழ்க்கைதனை தவிர்த்து  உள்ளூர் விவசாயம், கதர், கிராம தொழில்களை தலை கொடுத்தேனும் காப்பாற்ற மேற்படி நல்ல முயற்சிகள் கொண்ட மால்களை திறக்க,  அக்கறையுள்ள  பெரிய கார்பொரேட் அமைப்புக் களிடம் வேண்டுகோள் வைக்க  முனையலாமே!!

== கடையநல்லூரான்

பதிவு : KADAYANALLURAN
நாள் : 12-May-18, 8:31 pm

மேலே